Advertisement

திறந்த வெளியால் நித்தம் அவதி; பரிதவிப்பில் பெரிய கடை பஜார் பகுதிவாசிகள்

ராஜபாளையம் : குண்டும் குழியுமாக மாறிய ரோடு, ஆக்கிரமிப்பால் நெருக்கடி, பூட்டப்பட்ட சுகாதார வளாகம் என பல்வேறு பிரச்னைகளுக்கு ராஜபாளையம் பெரிய கடை பஜார் பகுதி மக்கள் ஆளாகின்றனர்.

ராஜபாளையம் முடங்கியாறு ரோடு முதல் ராஜூக்கள் பெரிய சாவடி வரை உள்ளது பெரிய கடை பஜார். இப்பகுதியானது ஆக்கிரமிப்புகளால் சுருங்கி குறுகலாக மாறி விட்டது. குடிநீர் குழுாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரோடு தோண்டப்பட்டதால் பள்ளமாக உள்ளது. இதே ரோட்டில் சக்தி விநாயகர் கோயில் பின்புறம் இப்பகுதியில்சேரும் குப்பையை குவித்து வைக்கும் இடமாக உள்ளதால் எப்போதும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் துர்நாற்றம் ஏற்படுகிறது.

இதே இடத்தில் அமைந்துள்ள மகளிர் சுகாதார வளாகம் பூட்டப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டதால் இப்பகுதி பெண்கள் திறந்த வெளியினை பயன்படுத்துகின்றனர்.திறந்த வெளியான மைதானம்மகளிர் சுகாதார வளாகம் தற்போது வரை பராமரிப்பு பணிகளுக்காக பூட்டியே உள்ளது. இதனால் இப்பகுதி திறந்தவெளிகழிப்பிடமாக மாறி வருகிறது. அருகில் உள்ள பாரம்பரியம்வாய்ந்த பொன்விழா மைதானத்தின் பின்பகுதியும் திறந்தவெளி கழிப்பிடமாக மாறுவதால் இப்பகுதியை கடப்போர் மனதை வேதனையாக்குகிறது.
-நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலகுமார், வியாபாரம்.

குண்டும் குழியுமான ரோடு

பஜார் ரோட்டில் பணிகளை காரணம் காட்டி குழிகளை தோண்டி போடுகின்றனர். பணிகள் முடிந்தும் முறையாக சமப்படுத்தும் பணிகள் நடைபெறவில்லை. இதை கடந்து செல்லும் மக்கள் ,வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர். அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

-முருகன், வியாபாரம்.

துர்நாற்றம் தாங்கல

கவிமணி தேசிய விநாயகள் தெரு எதிரே கோயிலின் பின்புறம் குப்பை தொட்டிகளை வைக்க ஆரம்பித்தனர். நாளடைவில் ஒவ்வொரு தொட்டியாக அதிகரித்து தற்போது மினி குப்பை கிடங்காக மாற்றி விட்டனர். விடுமுறை தினங்களில் இங்கு குவிக்கப்படும் கழிவுகளுடன் மாமிச கழிவுகளும் சேர்ந்து மிகுந்த துர்நாற்றத்ததை வீசுகிறது.
-சரவண கண்ணன், மெடிக்கல் கடை.

திருப்பத்தில் ஆக்கிரமிப்பு

பஜார் தெருவில் இருந்து நான்கு முனை சந்திப்பை அடையும் இடத்தில் விபத்து அதிகமாக ஏற்படுகிறது. ஏற்கனவே இங்கு டிரான்ஸ்பார்மர் ரோட்டை அடைத்துள்ளது.அத்துடன் வாடிக்கையாளர்கள் வாகனங்கள் ஆக்கிரமத்து வருகிறது. ரோட்டில் வாகன நிறுத்தத்திற்கு கட்டுப்பாடு ஏற்படுத்த போலீசார் முயற்சிக்க வேண்டும்.
-கண்ணன், வியாபாரம்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement