Advertisement

மாசி களரி விழாவில் மாட்டு வண்டி பந்தயம்

கமுதி : கமுதி அருகே முஷ்டக்குறிச்சியில் 17வது மாசி களரி திரு விழாவை முன்னிட்டு 3 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

கமுதி அருகே முஷ்டக்குறிச்சியில் இருளப்பசாமி, பாரை முனியப்பசாமி, வாழவந்த அம்மன் கோயில் மாசிக்களரி விழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தியம் என 3 பிரிவுகளில் தலா 10 மாட்டு வண்டிகள் என, 30 மாவட்ட வண்டிகள் பந்தய வீரர்கள், சாரதிகள் பந்தயத்தில் பங்கேற்றனர். முஷ்டக்குறிச்சியில் இருந்து கமுதி ரோடு வழியாக பெரிய மாட்டு வண்டிகளுக்கு 12 கி.மீ., சின்ன மாட்டு வண்டிக்கு 10 கி.மீ., நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.

இப்போட்டிகளில் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகளுடன் பந்தய வீரர்கள் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று இடங்களை பெற்று வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் பந்தய வீரர்களுக்கு ரொக்க பணம், அண்டா, குத்து விளக்கு உட்பட பரிசு பொருட்கள் கிராமத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement