Advertisement

தேர்வில் மதிப்பெண் பெற சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்ச:

கள்ளக்குறிச்சி இந்து சமுதாய ஆன்மிக பேரவை சார்பில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற ஹயக்ரீவர், தன்வந்திரி பூஜை நடந்தது.கள்ளக்குறிச்சி கங்கையம்மன் கோவிலில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் நல்ல தேக நலத்துடன் அதிக மதிப்பெண் பெற்றிட ஹயக்ரீவர், தன்வந்திரி ஹோமம் நடத்தி, பிரசாதமாக பேனா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எப்.எஸ்.எஸ்., தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார். கலைவாணி கல்விக்குழு செயலர் அருண்பாண்டியன் முன்னிலை வகித்தார்.மாணவர்களுக்கு டாக்டர் சங்கர் மருத்துவ ஆலோசனையும், விவேக் அகாடமி நிர்வாகி விவேக் கல்வி ஆலோசனையும் வழங்கினர். ஆடிட்டர் பாஸ்கர் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற 250க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி கல்விக்குப்பின் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயக்கல்வி படிப்பதற்கான வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.பூஜைகளுக்கான பணிகளை இந்து சமுதாய ஆன்மிக பேரவை இணை ஒருங்கிணைப்பாளர் ராம்ராஜ், அரவிந்தன் ஒருங்கிணைத்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement