Advertisement

ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம்

பரமக்குடி : பரமக்குடி காந்தி சிலை முன்பு நகர் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

நகர் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். நகர் ஜெ., பேரவை செயலாளர் வடமலையான் வரவேற்றார். பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர், மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா உள்ளிட்டோர் பேசினர்.ஜெ.,சாதனைகள் குறித்தும், தற்போதைய பட்ஜெட் குறித்தும் விளக்கம் அளித்தனர்.பின், ஏழைகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் இலவச வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் நகர் செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement