Advertisement

பெண் குழந்தைகள் தின பாதுகாப்பு விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை எஸ்.பி., ஜெயச்சந்திரன், டி.ஆர்.ஓ., சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கெஜலட்சுமி, சி.இ.ஓ., குமரன், டி.எஸ்.பி., ராமநாதன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முருகன் வரவேற்றார். டி.இ.ஓ., கார்த்திகா, வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், மாவட்ட ஜெ.ஆர்.சி., இணை கன்வீனர் ஜெரோம் பங்கேற்றனர்.பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பள்ளியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம், கோட்டைமேடு சென்று நேபால் தெரு வழியாக பள்ளியை வந்தடைந்தது. பள்ளி தலைமை ஆசிரியை மார்கரெட் நன்றி கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement