Advertisement

கும்மிடிப்பூண்டி ரயில்கள் ரத்து

சென்னை; ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கும்மிடிப்பூண்டி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை, சென்ட்ரல் மூர்மார்க்கெட் நிலையத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு, அதிகாலை, 12:15 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்ட்ரலுக்கு அதிகாலை, 2:45 மணிக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், நாளையும், வரும், 29, மார்ச், 1 மற்றும், 2ம் தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.நான்கு நிலையங்களில் நிற்காது பட்டாபிராம் நிலையத்தில், பராமரிப்பு பணி நடப்பதால், திருவள்ளூரில் இருந்து, அதிகாலை, 3:50 மணி, 4:55 மணி, அரக்கோணத்தில் இருந்து, அதிகாலை, 3:45 மணிக்கும், சென்னை, சென்ட்ரல் மூர்மார்க்கெட் நிலையத்துக்கு இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்படுவதால், நாளை, புட்லுார், திருநின்றவூர், நெமிளிச்சேரி மற்றும் பட்டாபிராம் நிலையங்களில் நிற்காது.அரக்கோணத்தில் இருந்து, வேளச்சேரிக்கு, அதிகாலை, 4:00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், புட்லுார், திருநின்றவூர், நெமிலிச்சேரி மற்றும் பட்டாபிராம் நிலையங்களில் நிற்காது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement