Advertisement

பங்காரு அடிகளாருக்கு சதாபிஷேகம்

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாருக்கு, சதாபிஷேக திருக்கல்யாண முத்து விழா, நேற்று நடைபெற்றது.மேல்மருவத்துார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் - லட்சுமி பங்காரு அடிகளாரின், சதாபிஷேக திருக்கல்யாண முத்து விழா, நேற்று நடந்தது.இவ்விழாவை ஒட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகமும், திருமாங்கல்ய பூஜையும், சிறப்பு வேள்வி பூஜையும் நடைபெற்றது.தொடர்ந்து, சித்தர் பீட வளாகத்தில், காலை, 9:30 மணிக்கு, பங்காரு அடிகளார், லட்சுமி பங்காருக்கு, திருமாங்கல்யம் அணிவித்தார்.விழாவில், அமைச்சர்கள் வீரமணி, சம்பத், செங்கோட்டையன், எம்.பி., அன்புமணி உட்பட, அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் என, பலர் பங்கேற்றனர்.மேலும், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஆதிபராசக்தி அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, பங்காரு அடிகளாரின் மகன்களான அன்பழகன், செந்தில்குமார் மற்றும் குடும்பத்தினர் செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement