Advertisement

செய்தி சில வரிகளில்.......

கோவில் கும்பாபிஷேகம்

திருவொற்றியூர்: காலடிப்பேட்டை, திலகர் நகரில், பழமை வாய்ந்த கங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மஹா கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. கோவில் வளாத்தில், கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, யாக வேள்விகள் நடத்தப்பட்டன. மஹா பூர்ணாஹூதி முடிவுற்று கலசங்கள் புறப்பாடாகின. பின், மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.விநாயகர் கோவில் அகற்றம்ஆவடி: ஆவடி, திருமுல்லைவாயல், சாந்திபுரம், முதல் தெருவில், தெருவை ஆக்கிரமித்து விநாயகர் கோவில் கட்டப்பட்டு இருந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரத்தால், நேற்று விநாயகர் கோவிலை அகற்றினர்.

லாரியால் போக்குவரத்து நெரிசல்

செங்குன்றம்: செங்குன்றம் புறவழிச்சாலையில், நேற்று காலை, 9:30 மணி அளவில், சரக்கு பெட்டக லாரி, 'பிரேக் டவுன்' ஆகி நின்றது. இதனால், செங்குன்றம் புறவழிச்சாலை, திருவள்ளூர் நெடுஞ்சாலை, கூட்டுச்சாலை சந்திப்பு, ஜி.என்.டி., சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில், மதியம், 2:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது.போராட்ட களத்தில் வளைகாப்புவண்ணாரப்பேட்டை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா அருகில், 14ம் தேதி முதல் போராட்டம் நடக்கிறது. அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி பாக்யலட்சுமிக்கு வளைகாப்பு விழா, நேற்று போராட்ட களத்தில் நடந்தது. இது குறித்து தம்பதி கூறுகையில், 'ஹிந்து -- முஸ்லிம் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், வளைகாப்பு விழாவை இங்கு நடத்தியுள்ளோம்' என்றனர். மாணவர்களுக்கு வழிகாட்டி கையேடுசென்னை: மாநகராட்சி, சென்னை ரோட்டரி கிளப் இணைந்து, ரிப்பன் மாளிகையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'வாழ்க்கை வழிகாட்டி' நிகழ்ச்சியை நேற்று நடத்தின. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு, 'வாழ்க்கை வழிகாட்டி' கையேடு வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், கல்வி அலுவலர் பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மின்வெட்டை கண்டித்து மறியல்


புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தில், நேற்று காலை, 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மின்வெட்டு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இரவு 8:00 மணியாகியும் மின்சாரம் வரவில்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள், காசிமேடு, சூரிய நாராயண சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசார் சமரசம் பேசியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement