Advertisement

லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப் தலைமறைவு நபராக அறிவிப்பு

இஸ்லாமாபாத்: லண்டனில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க தவறியதை அடுத்து, அவரை தலைமறைவாக இருப்பவராக, பாக்., அறிவித்துள்ளது.

அல்அஸீஸியா ஸ்டீல் ஆலை ஊழல் வழக்கில், பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு, கடந்த 2018ல், ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, இருதய கோளாறு உட்பட பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டன. உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில், அவர் வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொள்ள, லாகூர் உயர் நீதிமன்றம், எட்டு வாரங்களுக்கு அனுமதி அளித்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 19ல், சிறப்பு விமானம் மூலம், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவரது ஜாமின் காலம், 2019, டிசம்பர் 24ல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அவர் ஜாமின் நீட்டிப்பு கோரி, இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட மருத்துவ வாரியத்திடம் மனு செய்தார்.

இது குறித்து, நவாஸ் ஷெரீப்புக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, வாரியம் பதில் அளித்தது. மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யாத நவாஸ் தரப்பு, அவரது உடல்நிலை குறித்த மருத்துவ சான்றிதழை மட்டும் தாக்கல் செய்தது. இதை ஏற்றுக் கொள்ள, மருத்துவ வாரியம் மறுத்தது.

இந்நிலையில், பிரதமர் இம்ரான் கான் தலைமையில், நடைபெற்ற கூட்டத்தில், நவாஸ் ஷெரீப்பை தலைமறைவாக உள்ளவராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து, இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் கூறியதாவது: இந்த நாட்டின் சட்ட விதிகளின்படி, இன்று முதல், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தலைறைவாக உள்ள நபராக அறிவிக்கப்படுகிறார். அவர் நாடு திரும்பவில்லை எனில், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  கவலை படாதீர்கள் நவாஸ் ஷெரீப். அடுத்து வருவது இம்ரான் தான்.

 • ஆப்பு -

  இங்கிலாந்து வர வர கேவலமாயிட்டு வருது. முடிச்சவிழ்க்கி, மொள்ளமாரிக்கெல்லாம் அடைக்கலம். நம்ம ஊர் மல்லையா, நீரவ் மோடி எல்லரையும் சேத்துத்தான் சொல்றேன்.

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  அதென்னங்க எந்த அரசியவாதிக்கும் சிறைன்னாலே ஹார்டுலே அட்டேக் வரது . உலகம் முழுக்கவே இருக்கா இந்த அசிங்கம் துன்னுகொளுத்த பெருச்சாளிபோல இருக்கானுக எல்லா அரசியல்வியாதிகளிலும் பாக்க கொழுக் மொழுக்குன்னு ஓசில ஹாஸ்ப்பிடல்லே அட்மிட் ஆயிட்டு ஜாலியா வாழுறானுக பிராடுகளுக்கேதான் மரியாதைகள் கிட்டுமோ , பசி அடிச்சுகொள்ளைகளோ பலபில்லியன்களிலே ஆனால் ஜாமீனிலேவந்துட்டு எண்ணமாபேசுறாக செட்டியார் ஹானெஸ்ட் என்றவார்த்தைக்கு பொருத்தம் இல்லாத பிராடு

 • chandran - ,

  அதான் அடுத்து இம்ரான் பாய்க்கும்.

Advertisement