Advertisement

தி.மு.க.,வில் இணைந்த அ.தி.மு.க.,வினர்

கமுதி: டி.புனவாசல் ஊராட்சி துணைத் தலைவர் கண்ணன் வரவேற்றார். டி.புனவாசல், சிம்பூர், வல்லக்குளம், தேத்தாங்குளம் மற்றும் அதனை சுற்றிஉள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், அ.தி.மு.க.,ல் இருந்து விலகி உறுப்பினர் அட்டைகளை மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கத்திடம் வழங்கி தங்களை தி.மு.க., வில் இணைத்து கொண்டனர்.

இவ்விழாவில் மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., மீது மக்கள் அதிருப்தியடைந்து தி.மு.க., விற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். எனவே வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் தான் நிச்சயம் முதல்வராவார். இவ்வாறு பேசினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement