Advertisement

இருக்கை இங்கே; நிழற்குடை எங்கே

கீழ்ப்பாக்கம்: பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணியர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், டெய்லர்ஸ் சாலை பஸ் நிறுத்தம் உள்ளது.

இதை, தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால், பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் இருக்கை வசதி மட்டுமே உள்ளதால், பயணியர் வெயிலிலும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், பயன்பாடின்றி காணப்படும் பஸ் நிறுத்த நிழற்குடையை, இது போன்ற இடங்களில் மாற்றி அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement