Advertisement

ஜெ., நினைவிடம்: பொதுப்பணி துறைக்கு அடுத்த சவால்

சென்னை:மெரினாவில் நடந்து வரும், ஜெயலலிதா நினைவிடம் கட்டுமானப் பணி, கடல் காற்று காரணமாக தாமதமாகிறது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல், சென்னை மெரினா கடற்கரையில், எம்.ஜி. ஆர்., நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு, 58 கோடி ரூபாய் செலவில், ஜெ.,க்கு நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.இப்பணியை மார்ச் மாதத்திற்குள் முடிக்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். 'சென்ட்ரிங்'கட்டுமானப் பணியில், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பீனிக்ஸ் பறவை வடிவ கட்டுமானத்திற்கு, மிக உயரத்தில், 'சென்ட்ரிங்' அமைத்து, கம்பிகள் பொருத்தி, 'கான்கிரீட்' போடும் பணி நடக்கிறது. போக்குவரத்துக்கு பாதிப்பில்லாமல், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து கான்கிரீட் கலவை எடுத்து வரப்படுவதால், இரவில் வேலை அதிகமாக நடக்கிறது. பகல் நேரங்களில், சென்ட்ரிங் கம்பி கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன.பகல் நேரத்தில் கடல் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன், கடல் காற்று வீசுகிறது.இதனால், மிக உயரத்தில் பணிகளை வேகமாக செய்ய முடியாத நிலைக்கு, கட்டுமான தொழிலாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
புதிய தொழில்நுட்பத்தில், சென்னை, ஐ.ஐ.டி., வடிவமைத்து தந்துள்ள பீனிக்ஸ் பறவை வடிவ கட்டுமானம், பொதுப்பணித் துறைக்கு மிகுந்த சவாலாக உள்ளது.எதிர்பார்ப்புதற்போது, இயற்கையின் சவாலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதையும் மீறி, கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.ஜெ., நினைவிடத்தில் வண்ண மலர்கள் நிறைந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.இதற்காக, ஆந்திர மாநிலம், ராஜமுந்திரிக்கு சென்ற பொதுப்பணித் துறை உயர் அதிகாரிகள், அங்கிருந்து மலர் செடிகள் மற்றும் மரங்களுடன் திரும்பியுள்ளனர்.வண்ண மலர் பூங்கா பணிகளும் வேகம் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஆண்களை காலில் விழ வெத்து புன்சிரிப்பை ஏந்தும் ஆணவமிக்கவர், இவரது சாவு எப்போது என்பதே கேள்விக்குறியானது மகா பாவம் செய்தவர், அம்மா உணவுத்திட்டம் போட்டதால் முதல்வராக இறந்து விட்டார் மற்றபடி இவர் ஒரு ........

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஒரு ஊழல் குற்றவாளிக்கு நினைவிடம் அமைப்பதை வன்மையாக கண்டிக்கிரெய்ன் ,மன்னார்குடி மாபியாவை உருவாக்கியவர் பட்டதாரிகளுக்கு மதுவை ஊற்றி கொடுக்க வாய்த்த புண்ணியவதி. ஊழல் மன்னன் கலைஞர் வரக்கூடாது என்பதர்காக மக்கள் மீண்டும் இவரை தேர்ந்தெடுத்தனர் .

 • Rajesh - Chennai,இந்தியா

  A1 ஆ A2 ஆ?

 • சேரன் செங்குட்டுவன் - Coimbatore,இந்தியா

  நினைவகம் கட்டவில்லை என்றால் ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை. 58 கோடிக்கு உருப்படியாக ஏதாவது செய்யலாம்.

  • Kandaswamy - Coimbatore,இந்தியா

   58 கோடி எப்படி வீணாகும்? சுற்றுலா மற்றும் அதை சார்ந்த வருமானங்களை கணக்கில் கொள்ளவும்.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

   உயிரோடு இருந்தால் சிறையில் இவருக்கு நினைவிடம் தேவையா ? மத்திய அரசு இதை கண்டிக்க வேண்டும்.

 • Krish - Chennai ,இந்தியா

  ஊட்டி தாவர பூங்காவில் நல்ல மலர்கள் இல்லையா. ஆந்திராவிலுருந்து பூக்கள். வட நாட்டு கூலிகள். வளைகுடா நாட்டு என்ஜினீயர்கள். பணம் மட்டும் தமிழக மக்கள் வரிப்பணம். கடன் வாங்கும் அரசு உள்ளூர் வசதிகளை பயன்படுத்தி கடனை குறைக்க முயற்சி செய்யவும்.

Advertisement