Advertisement

நண்பரானாலும் கறார்!

நண்பரானாலும் கறார்!

டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலும், கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனும், மிக நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.பினராயி விஜயன் டில்லி வரும்போதெல்லாம், கெஜ்ரிவாலை சந்திக்காமல் இருக்க மாட்டார். அதேபோல், கெஜ்ரிவாலும், அரசியல் ரீதியான முக்கிய விஷயங்களுக்கு, பினராயி விஜயனின் ஆதரவை பெற தவறுவது இல்லை.'அரசியலில் முதிர்ந்த அனுபவம் உடையவர். அவரை சந்திக்கும்போது, பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது' என, பினராயி விஜயனுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறார் கெஜ்ரிவால்.பதிலுக்கு பினராயி விஜயனும், 'அரவிந்த் கெஜ்ரிவால், புதுமையான அரசியல்வாதி; இளைஞர். அவரால், டில்லியில் மட்டுமல்ல, நாட்டின் மற்ற மாநிலங்களிலும் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என, புகழ்கிறார்.அதேநேரத்தில், தேர்தல் விஷயத்தில் மட்டும், இருவரும் எதிரெதிர் நிலையை எடுக்கின்றனர். டில்லியில், கேரள மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, 'கேரள மக்களின் ஓட்டுகளை எங்கள் கட்சிக்கு அளிக்கும்படி, நீங்கள் ஒரு அறிக்கை விட்டால் நன்றாக இருக்கும்' என, பினராயி விஜயனிடம், கெஜ்ரிவால் கூறினார்.ஆனால், அதற்கு அடுத்த நாளே, இடதுசாரி கட்சிகள் சார்பில் டில்லியில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதையறிந்த கெஜ்ரிவால், 'என்ன தான் நண்பராக இருந்தாலும், தேர்தல் விஷயத்தில் ரொம்ப கறாராக இருக்கிறாரே' என, புலம்புகிறார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement