Advertisement

முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் விழா

உளுந்துார்பேட்டை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி உளுந்துார்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில் ஜெ., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில், ஜெ., சிலைக்கு குமரகுரு எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலர் மணிராஜ், நகர செயலர் துரை, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம், அறங்காவலர் குழுத் தலைவர் சந்தோஷ், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ராமசாமி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமலிங்கம், ஜெயபால், முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வகுமார், துணைத்தலைவர் மணிராஜ், நிர்வாகிகள் பிரதீப்ராஜ், பாஸ்கர், சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.


ரிஷிவந்தியம்: கரையாம்பாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட விவசாய அணி செயலர் கதிர் தண்டபாணி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேகர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் கதிர் செல்லப்பன், கிளைச் செயலர் சுப்புராயன், மேலவை பிரதிநிதி மண்ணாங்கட்டி, நிர்வாகிகள் கதிர், விஜயவர்மன், சிவா, முனியப்பன், ஆறுமுகம், பெருமாள், பிரசாந்த், வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.சங்கராபுரம்: சங்கராபுரம் கடை வீதியில் நகர செயலர் நாராயணன் தலைமையில் ஒன்றிய செயலர் அரசு அன்னதானம் வழங்கினார்.


ஒன்றிய அவை தலைவர் திருமால், நகர அவை தலைவர் ஷாஜகான், பொருளாளர் ராஜா, கோவிந்தசாமி, நாகராஜன், முத்தையன், குசேலன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் குமரவேல், மேலப்பட்டு ராசேந்திரன், வக்கீல் தாமரைச்செல்வன், ராஜமாணிக்கம், முன்னாள் சேர்மன் சன்னியாசி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement