Advertisement

தேவையா இந்த பதவி?

'களைப்பாக இருக்கிறது; கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என, சற்று கண் மூடினால் கூட, பீதியை கிளப்பி, பதற வைக்கினறனர்' என, தன் சொந்தக் கட்சிக்காரர்களையே நொந்து கொள்கிறார், கர்நாடகா முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா.

மோடி, முதல் முறையாக பிரதமராக பதவியேற்றபோதே, பா.ஜ.,வில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. 70 வயதை கடந்தவர்களுக்கு, கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பதவிகள் தரப்படாது என்ற, எழுதப்படாத விதி அமலுக்கு வந்தது.இந்த விஷயத்தில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது அவருக்கு, 77 வயது. முதல்வர் பதவிக்கு அவரை விட, செல்வாக்கான தலைவர் வேறு யாரும் இல்லை என்பதால், வயது வரம்பு விஷயத்தில், அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா, பா.ஜ., வில் உள்ள அதிருப்தியாளர்கள், இதற்கு சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எடியூரப்பா, ஒரு நாள் தலைமைச் செயலகத்துக்கு வராவிட்டால் கூட, 'வயது மூப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்; முதல்வர் பதவியிலிருந்து, அவரை துாக்குவது தான் நல்லது' என, தகவலை பரப்புகின்றனர்.

இவர்களுக்கு பயந்து, துாங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில், தன்னை, 'பிசி'யாக காட்டுவதில், ரொம்பவே மெனக்கெடுகிறார். 'இந்த பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் தள்ளாத வயதில், மனிதர் இவ்வளவு அவஸ்தை படுகிறாரே... தேவையா இது' என, ஆதங்கப்படுகின்றனர் எடியூரப்பாவின் விசுவாசிகள்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement