Advertisement

கலெக்டர் வருகை அதிகாரிகள், உஷார்

செங்கல்பட்டிலேயே கலெக்டர் அலுவலகம் இருப்பதால், மாவட்டத்தின் பிற பகுதிகளை, கலெக்டர் விரைந்து அடைவதால், அந்தந்த பகுதி அதிகாரிகள், பணியிடத்தில், எந்நேரமும் இருக்கும் கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் ஒன்றாக இருந்தபோது, காஞ்சிபுரம், தலைநகராக இருந்தது.மாவட்ட கலெக்டர், இங்கிருந்து, பிற பகுதி ஆய்விற்கு, காரில் புறப்பட்டால், 40 - 75 கி.மீ., பயணம் செய்யவேண்டும்.அவரது அலுவலகத்தினர், அந்தந்த பகுதி அதிகாரிகளுக்கு, கலெக்டர் வருகை குறித்து, தகவல் தெரிவிப்பர்; அவரும் சென்று சேர, 1 - 2 மணி நேரமாகும்.ஆய்வுப் பகுதி அதிகாரிகள், வேறிடத்தில் இருந்தாலும், கலெக்டர் பயண தாமதத்தால், அவர் வரும் முன், குறிப்பிட இடத்திற்கு அதிகாரிகள் வந்தடைவர்.

தற்போது, செங்கல்பட்டு மாவட்டம் உருவாகி, செங்கல்பட்டில் கலெக்டர் அலுவலகம் இயங்குகிறது. மாவட்ட கலெக்டர், இங்கிருந்து, மாவட்டத்தின் பிற பகுதிகளை, 15 - 45 நிமிடங்களில், விரைந்து அடைகிறார்.எந்த அலுவலகத்திற்காவது அல்லது பகுதிக்காவது செல்வதென்றால், குறைந்தபட்ச நேரத்தில், கலெக்டர் காரில் சென்று விடுகிறார்.பிற பகுதி அதிகாரிகள், பணியிடத்தில், எந்நேரமும் இருந்தால்தான், திடீரென வரும் கலெக்டருன் இருக்க இயலும்.எனவே, பணியிடத்தில், அவர்கள் எப்போதும் இருக்கவேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement