Advertisement

சிறுமியிடம் சில்மிஷம் ; மளிகை கடைகாரர் கைது

திருக்கோவிலுார் : சங்கராபுரம் அருகே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மளிகை கடைகாரர்,'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.



கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பவுஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்கர் அலி, 41; மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி, கடைக்கு வந்த 6 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து தப்பிச் சென்ற சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், வழக்கு பதிந்து 'போக்சோ' சட்டத்தின் அஸ்கர் அலியை கைது செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement