Advertisement

சரக்கு வாகனம் கவிழ்ந்து 18 பெண்கள் படுகாயம்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 18 பெண்கள் படுகாயமடைந்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்கள், அதே ஊரில் உள்ள செல்லியம்மன் கோவிலுக்கு டாடா ஏஸ் வேனில் வந்தனர். அங்கு சுவாமி கும்பிட்டு விட்டு ஊர் திரும்பினர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் அப்பு என்கிற குறளரசன், 22; ஓட்டினார்.கடுவனுார் ஏரிக்கரையில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு டாடா ஏஸ் வேன் முந்த முயன்றது.அதில், குறளரசன் ஓட்டிய வேன் மீது உரசியதில், பள்ளத்தில் கவிழ்ந்தது.


இதில், வேனில் பயணம் செய்த கடுவனுார் ஏழுமலை மனைவி விஜயலட்சுமி, 40; பாலகிருஷ்ணன் மனைவி சித்ரா, 50; ராமன் மனைவி செம்பாத்தா, 53, உட்பட 18 பெண்கள் வேனுக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தனர்.சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் அனைவரையும் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், விபத்து குறித்து மற்றொரு வேன் டிரைவர் அருளம்பாடியைச் சேர்ந்த தாஸ், 43; என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement