Advertisement

தி.மு.க.,காரங்க மீது எரிந்து விழுகிறாரே!

ராமேஸ்வரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, முன்னாள் மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மதுரை வந்தார்.
அப்போது, நிருபர்கள் அவரிடம், ' தி.மு.க., எம்.பி., - ஆர்.எஸ்.பாரதி, 'நாங்களும் ஹிந்துக்கள் தான். உண்டியலில் பணம் போடுகிறோம்' என கூறியுள்ளாரே' என, கேள்வி எழுப்பினார்.ஆவேசமுற்ற பொன். ராதாகிருஷ்ணன், 'ஒரு புறமும் ஒன்றுமில்லாத விஷயங்களுக்காக, தி.மு.க.,வினர் இஸ்லாமியரை துாண்டி விடுகின்றனர். ஆனால், அரசியல் பிழைப்புக்காக, நாங்களும் ஹிந்துக்கள் என, கூறுகின்றனர். அதிலும், ஆர்.எஸ்.பாரதி பேசும் போது, 'தி.மு.க., வட்ட செயலர், கோவிலுக்கு போனா, 100 ரூபாய் போடுவார்; கவுன்சிலர், 500 ரூபாய் போடுவார்; எம்.எல்.ஏ., 1000 ரூபாய் போடுவார்; கே.என்.நேரு மாதிரி ஆட்கள், 5000 ரூபாய் கூட, போடுவாங்க' என பேசியிருக்கிறார். அவங்க, அப்பன் வீட்டு பணத்தையா போடுகின்றனர். நாட்டை கொள்ளையடித்த பணம் தானே... செய்த பாவத்திற்கு பிராசியத்தம் தேடுகின்றனர். தி.மு.க.,வினருக்கு, ஏன் இந்த இரட்டை வேடம்' என கடுமையாக சாடினார்.
மூத்த நிருபர் ஒருவர், 'சரியான கேள்வியான தானே நாம் கேட்டோம்; பொன்.ராதா இப்படி தி.மு.க.,காரங்க மீது, எரிந்து விழுகிறாரே' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் தலையை குனிந்தபடி சிரித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • krishnakumar - chennai,இந்தியா

    பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதில் என்ன தவறு. உண்டியலில் காசு போடுவதால் ஒருவன் ஹிந்து என்ற விளக்கத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை. முன்னாள் அமைச்சர் அதைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

Advertisement