Advertisement

உலகையே திருப்பிய சத்தியம், சிவம், சுந்தரம்!

தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா, மதுரை தியாகராஜர் கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி செயலர் தியாகராஜன், 'உலகின் மூன்று பெரிய நிறுவனங்களான, மைக்ரோசாப்ட் சத்யா நாதெள்ளா, எச்.சி.எல்., சிவ்நாடார், கூகுள் சுந்தர் பிச்சை ஆகியோர் தலைமை பொறுப்பில் உள்ளனர். 'இவர்கள் பெயர்களை வரிசையாக வாசித்து பார்த்தால், சத்தியம், சிவம், சுந்தரம் என வரும். சுந்தர் பிச்சை, மதுரையில் வசித்தவர். இதன்படி, உலகத்தையே தங்கள் பக்கம் திருப்பி பார்க்கும் வகையில் தமிழர்கள் உள்ளனர்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து, வளர்ந்து வெளிநாடுகளில் கோலோச்சும் தமிழர்கள், தங்கள் புத்திக்கூர்மையால் உலகையே தங்கள் வசப்படுத்தி வருகின்றனர்' எனக்கூற, மற்றவர்கள் அதை ஆமோதித்து தலையசைத்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    என்ன ஒரு அபார கண்டுபிடிப்பு

Advertisement