Advertisement

கன்டெய்னர் லாரி மீது பைக் மோதி எஸ்.ஐ., பலி

திருநெல்வேலி : தேசிய நெடுஞ்சாலையில் முன்னெச்சரிக்கை இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் சப் இன்ஸ்பெக்டர் பலியானார்.
தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சிவசுப்பிரமணியன் 34. நேற்று(பிப்.,22) இரவு அச்சங்குளம் அருகே ஒரு கொலை மிரட்டல் புகார் குறித்து விசாரிக்க பைக்கில் சென்றார். மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த எஸ்.ஐ., 2011ல் பணியில் சேர்ந்தவர். மனைவி சுப்புலட்சுமி, இரண்டு வயது மகள் சக்திஸ்ரீ உள்ளனர். தமிழகத்தில் வெறும் 3 சதவீதமே உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 40 சதவீத உயிரிழப்பு விபத்துகள் நடப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் உயிர்ப்பலிகள் தொடர்கின்றன. அரசோ, நான்கு வழிச்சாலையை நிர்வகிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையமோ சாலை பாதுகாப்பு, பராமரிப்பில் அக்கறை காட்டுவதை விட்டு விட்டு சுங்கச்சாவடி வசூலில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், உயிர் பலிகள் தொடர்கின்றன.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    டிஜிட்டல் இந்தியா .. அதிவேக வளர்ச்சி ,,பண மதிப்பிழப்பு ..போதத்துக்கு NPIR.CAA.NRC.. ஆக ஒரே வளர்ச்சின்னு விளம்பரம் .. எப்படின்னா எழவு வீட்டில் பாட்டுக்கச்சேரி போல ..

  • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

    வெளி நாட்டில் இருப்பதை போன்று சட்டம் கடுமையாக இருக்க வேண்டும். இதே திருநெல்வேலியில் தேசிய நெடுஞசாலையில் ஒரு வழி தடத்தில் எதிரே வந்தே வாகனத்தில் மோதி ரெண்டு பேர் பலியாகி உள்ளார். போக்கு வரத்து விதிகளை யாரும் மதிப்பதில்லை . அபராதம் போட்டால் தயா தகா என்று அரசியல் கட்சிகள் குதிக்கிறது ஒண்ணுமே பண்ண முடியாது .

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Avvallavu periya container lorry kannukku theriyavillaiyaa 10 adi idaiveli vittu thodaravum yen athu avarukku maranthu vittathaa oru adi kooda idaiveli illaamal thodar vathu vaadikkai aakivittathu kanda idankalil niruthum vaakanankalin mel yen nadavadikkaikal yedukkappada villai highway patrol yenna seykiraarkal marathadiyil nirutthi sugamaaka thoonkukiraarkal

Advertisement