Advertisement

நெல்லையில் துணிகரம்: ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி

திருநெல்வேலி: திருநெல்வேலி சாந்தி நகரில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் இன்று(பிப்.,23) அதிகாலை சுமார் 3 மணியளவில் 2 வாலிபர்கள் இரும்புக் கம்பியால் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்தனர். இது, மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு இணையதளம் மூலம் தகவல் சென்றது. இதன்அடிப்படையில் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபர்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வண்ணார்பேட்டை சேர்ந்த முத்து மற்றும் சுந்தர்ராஜ் என்பது தெரியவந்தது. இருவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    பாவம் காவலர்கள், இவர்கள் என்னதான் தங்கள் உயிரை பணயம் வைத்து இது போன்ற தங்கள் தொழிலுக்கு முன்னால் திரு என்ற போட்டுக்கொண்டு தொழில் புரிவோர் சிறைக்கு சென்ற வேகத்தில் மீண்டும் வெளியே வந்து அடுத்த கைவரிசை காட்டுவது ஒரு விளையாட்டாகிப்போனது, மக்களுக்கும் நாட்டுக்கும் பணியாற்ற முடியாமல் தவிக்கும் உண்மையான காவலர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம், திருடர்கள் அரசாங்க செலவில் மிக மிக ஆனந்தமாக வாழ்க்கை நடத்துகின்றனர், வந்தே மாதரம்

  • S.P. Barucha - Pune,இந்தியா

    ஏ.டி.எம் மையம் உள்ள பகுதி காவல் அதிகாரிகளுக்கு இணைய தள இணைப்பு இருந்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ரெண்டு பெரும் போராளிகளாக இருக்கப்போறாங்க

Advertisement