Advertisement

ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற

மதுராந்தகம்: வயலுாரில், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, விவசாயிகள், ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.சூணாம்பேடு அடுத்த, வயலுார் கிராமத்தில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 150 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி, 300 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த ஏரிக்கு அருகாமையில் உள்ள நிலங்களை, சென்னையைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், சமீபத்தில் விலைக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலத்திற்கு, வாகனங்கள் சென்று வர ஏதுவாக, வயலுார் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மண் சாலை அமைத்துள்ளனர். தகவல் அறிந்த அப்பகுதி ஏரி பாசன விவசாயிகள், நேற்று முன்தினம், ஏரியில் குவிந்தனர்.

ஏரியில் சாலை அமைப்பதால், ஏரிக்கான நீர்வரத்து குறைந்து, விவசாயம் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகள், ஏரியிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த சூணாம்பேடு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டத்தை கை விட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.ஏரி ஆக்கிரமிப்பு குறித்து, விவசாயிகள் நேற்று, செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லுாயிசிடம் மனு அளித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement