Advertisement

பொதுத்தேர்வுக்கு வசதிகள் பள்ளிகளில் ஏற்படுத்த உத்தரவு

செங்கல்பட்டு: ''செங்கல்பட்டு மாவட்டத்தில், பொதுத்தேர்வுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு, கலெக்டர் ஜான்லுாயிஸ் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் மாதம், பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கான ஆய்வு கூட்டம், கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையில், மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, எஸ்.பி., கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஏ.நாராயணன், ஜி.கிருஷ்ணன், தாமோதரன் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கலெக்டர் கூறியதாவது:தேர்வு மையத்திற்கு மாணவர்கள் குறித்த நேரத்தில் வர போக்குவரத்து வசதி, தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும்.மேலும், வினாத்தாள் மையங்களுக்கு, முழு நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இதை, அனைத்து துறை அதிகாரிகளும் செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement