Advertisement

5வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா: இங்கி., பிரான்சை முந்தியது

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 2019ம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பிரான்சை பின்னுக்கு தள்ளிய இந்தியா, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை மையமாக கொண்ட வேர்ல்டு பாப்புலேஷன் ரிவ்யூ என்ற அமைப்பு, பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.94 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகியுள்ளது. இதன் மூலம் 2.83 டிரில்லியன் டாலருடன் இருக்கும் இங்கிலாந்து மற்றும் 2.71 டிரில்லியன் டாலருடன் இருக்கும் பிரான்ஸ் தரவரிசையில் பின்தங்கியுள்ளன.
தன்னிச்சையான பொருளாதார கொள்கையில் இருந்து மாறுபட்டு, திறந்த சந்தை பொருளாதாரத்திற்கு இந்தியா மாறி வருகிறது. வாங்கும் திறன் சமநிலை (பிபிபி) விதிமுறைகளில், இந்தியாவின் ஜிடிபி 10.51 டிரில்லியன் டாலராக உள்ளது, இது ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட அதிகமாகும். இருப்பினும், இந்தியாவின் வருடாந்திர ஜிடிபி வளர்ச்சியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக (7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக) சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (49)

  • Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    "5வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா" - ரிசர்வ் வங்கி வைப்பு நிதி ... LIC ... ஏர் இந்தியா .. ரயில்வே .... துறைமுகம் ... விமானநிலையம் .... BSNL .... அனைத்தும் விற்க பட்டது... பிறகு எப்படி?

  • madhavan rajan - trichy,இந்தியா

    சிதம்பரம் உடனே பேட்டி கொடுப்பார். மோடியின் தலைமையில் இந்தியா மிகவும் மோசமாக இருக்கிறது என்று உலக அரங்கில் கூறுகிறார்கள்.

  • Sivak - Chennai,இந்தியா

    இந்தியா நமது தாய்நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது என்ற செய்தி கூட அயல் நாட்டு அடிமைகளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது ... இதுல குடியுரிமை கேட்டு போராட்டம் அதுவும் அடுத்த நாட்டு காரா புயல்களுக்கு ... வெக்கமாவே இல்லை உங்களுக்கு?

  • elakkumanan - Naifaru,மாலத்தீவு

    காப்பர் பாக்டரியை ஒழிக்க வெளி நாடு காசு வாங்கிட்டு, கூவுன கூட்டம், எதுக்கு இந்திய பொருளாதாரத்தை பற்றி வருத்தப்படுத்து .................இப்போ, அதே காப்பர் பக்கத்து நாட்டிலிருந்து நாம வாங்குறோம் ......................... இதுதானேடா, உங்களோட நோக்கமே .......................எச்ச காசுக்கு, நாட்டை காட்டிக்கொடுத்த கூட்டம் .................................இந்தியா வளர்வது , பாக்கிக்கு மட்டும் இல்லை, இங்கயே சில பேருக்கு தூக்கம் வரலே. ............ ................ ஆனால், கணக்கு கேப்பானுவோ ..........................

  • Ramesh - Chennai,இந்தியா

    எல்லாம் பேப்பரில் மட்டும்தான், நிஜத்தில் பூச்சியம்தான்.

Advertisement