Advertisement

மஹாராஷ்டிராவில் என்.பி.ஆர்.,க்கு தடையில்லை

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி :மஹாராஷ்டிராவில் என்.பி.ஆர்., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்துவதற்கு தடையில்லை எனக்கூறியுள்ள, அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, சிஏஏ குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை எனவும், அதே நேரத்தில் என்.ஆர்.சி., அமல்படுத்துவதை அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:
என்பிஆர் படிவங்கள் குறித்து தான் நேரடியாக ஆய்வு செய்வேன். என்.பி.ஆர், கணக்கெடுப்பால் யாருக்கும் பாதிப்பு இருக்கக்கூடாது. அதேநேரத்தில் என்ஆர்சி அமல்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. சிஏஏ, என்ஆர்சி என்பது வேறு, என்பிஆர் என்பது வேறு. சிஏஏ அமல்படுத்தினால் யாரும் கவலைப்பட தேவையில்லை. என்ஆர்சி அமல்படுத்தினால் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் ஆதிவாசிகளும் பாதிக்கப்படுவார்கள். தற்போது வரை என்.ஆர்.சி., குறித்து மத்திய அரசு விவாதிக்கவில்லை. என்பிஆர் என்பது கணக்கெடுப்பு மட்டுமே. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த கணக்கெடுப்பால் யாரும் பாதிக்கப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடக்கும் கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மூன்று கட்சிகளும் என்.பி.ஆர்., குறித்து ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றன. லோக்சபாவில், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த சிவசேனா, ராஜ்யசபாவில், ஓட்டெடுப்பின் போது வெளிநடப்பு செய்தது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (25)

  • N.Purushothaman - Cuddalore,இந்தியா

    இப்போ ராங்கிரஸ் மற்றும் திருட்டு திராவிடால்ஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பு கூட நடத்தக்கூடாதுன்னு சொல்றானுங்க .....

  • Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா

    பெரும்பான்மை ஒட்டுக்கும் ஆசை .......

  • sridhar - Chennai,இந்தியா

    Thandavakkon. I pity your ignorance. What if telengana and Andhra assemblies pass resolutions against CAA. It has already become an act with president’s assent. Who are they to stop caa, nrc etc. you people are cheating gullible Muslims with false information for cheap political purposes. National interest is of no importance to you. Cheap people.

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

    பூர்விகம் என்ன என்பதை சொல்வதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும்.எந்தநாட்டிலும் தன் நாட்டில் பிறநாட்டினர் நுழைவதை தடுக்க கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. அதன் மூலம் அந்தந்த நாட்டு பிரஜைகளுக்கு வேலைவாய்ப்பு காக்கப்படுகிறது. மற்றும் அரசு மருத்துவமனை, ரேஷன், கல்வி போன்ற அரசு செலவினங்கள் அந்தந்த நாட்டு குடிமக்களுக்கு மட்டும் தான் தரப்படுகிறது.ஆனால் இந்தியாவில் அதுபோன்ற கட்டுப்பாடு இல்லாமல் பங்களா தேசிகள் போன்றவர்கள் இந்தியாவில் நுழைந்து நம் நாட்டுமக்கள் வேலைவாய்ப்பை திருடிச்செல்கிறார்கள். தவிர அவர்களுக்கும் நம் வரிப்பணம் செலவிடப்படுகிறது . இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தால் உண்மையான குடிமக்கள் அதை ஆதரிக்கவேண்டும். எதிர்ப்பவர்கள் நாட்டின் விரோதிகள்.

  • manu putthiran - chennai ,இந்தியா

    மிகவும் சுலபமாக இந்த சட்டங்களை புரிந்து கொள்ள முடியும்.. அதாவது.. ஒருவர் இந்துவாக இருக்கும் பட்சத்தில் அதுவே போதுமான ஆதாரமாக இருக்கும்.. முஸ்லிம் அல்லாத மற்ற அனைத்து மதத்தினருக்கும் இது பொருந்தும்.. இந்திய விரோத முஸ்லிம்கள் கண்டிப்பாக வெளியேறி ஆக வேண்டும்.. தேசத்தை நேசிக்கும் முஸ்லிம் சிறிதளவு கூட அச்சம் அடைய தேவை இல்லை..

Advertisement