Load Image
Advertisement

கொடிவேரியில் இரட்டை கட்டண வசூல்: ரத்து செய்ய கோரி ம.நீ.ம., முறையீடு

ஈரோடு: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில், இரட்டை வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரி, கலெக்டர் கதிரவனிடம், மக்கள் நீதி மய்யம் சார்பில், நேற்று மனு வழங்கினர்.


ஈரோடு வடகிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில், செயலாளர் சிவகுமார் தலைமையில் மனு வழங்கி கூறியதாவது: கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகளின் வாகனத்துக்கு, இரட்டை வரி வசூலிக்கின்றனர். இதை ரத்து செய்ய வேண்டும். அங்கு நடக்கும் குற்ற நடவடிக்கையை தடுக்க, அணை பகுதியில் அமைந்துள்ள புறக்காவலர் நிலையத்தில், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத கண்காணிப்பு கோபுரத்தை, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு மாற்ற வேண்டும். ஆற்று மணலில் மூழ்கி கிடக்கும் ஓய்வறை, நிழற்கூடத்தை சுத்தம் செய்து சீரமைக்க வேண்டும். பூங்கா, உடை மாற்றும் அறை, அணை பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பையை அகற்றி, சுகாதாரம் காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement