Advertisement

நடவடிக்கை! மதுரையில் ஷேர் கார் பெர்மிட் வழங்க...போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம்

மதுரை : மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 'ஷேர்' கார் பெர்மிட் வழங்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


நகரில் தெற்கு, வடக்கு, மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.,) மூலம் ஏழு ஷேர் ஆட்டோக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12,233 ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது. எனினும் டீசல் ஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்கள் போல் இயக்கப்படுகின்றன. ஆட்டோ ஒன்றில் டிரைவர் உட்பட நான்கு பேர் மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆறு முதல் பத்து பேர் வரை அதிகளவில் பயணிகளை ேஷர் ஆட்டோக்களில் ஏற்றி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.


நகரில் ஏழாயிரத்துக்கும் அதிகமான ஷேர் ஆட்டோக்கள் இயங்குவது நுகர்வோர் பாதுகாப்பு மைய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றை முறைப்படுத்த வேண்டும் என மையம் வலியுறுத்தியுள்ளது.இந்நிலையில் சென்னையை போல் ஷேர் ஆட்டோ பெருக்கத்தை கட்டுப்படுத்தவும், நெரிசலை தவிர்க்கவும் எட்டு பேர் பயணிக்கும் 'ஷேர்' கார் பெர்மிட் வழங்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • Bala - MADURAI,இந்தியா

    ஷேர் கார் / வான் ஒரு நல்ல முடிவாக இருக்கும் என்பதில் மாற்று கருது இல்லை. கால் டாக்ஸி போல் / டூரிஸ்ட் வான் போல் மக்கள் சேவை வாஹனம் [PUBLIC TRANSPORT] போல் பதிவு செய்து கொண்டால் போதும் என்ற வரைமுறைக்குள் கொண்டு வந்தால் போதும். YEARLY ROAD TAX + INSURANCE கட்டயமாம் செயல் படுத்த பட வேண்டும். பெர்மிட் என்ற ஒன்று தேவை இல்லை.

  • kumaresan kr - madurai ,இந்தியா

    வரவேற்க தக்கது . இப்போது இருக்கும் ஷேர் ஆட்டோவில் வயததானவர்கள் உட்கார கஷ்டப்படுகிறார்கள் . அது மட்டுமல்லாமல் , இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு விதிமுறைகள் எதுவும் பொருந்துவதில்லை . விதி மீற்றர்கள் அதிகம் .ஏன் என்று கேட்க ஆளில்லை. ஷேர் ஆட்டோக்கள் இல்லாமல் இருந்தாலே மதுரை நகரம் வளர்ச்சியை நோக்கி செல்லும் . ஷேர் ஆட்டோக்களால் ஏழை நடுத்தர மக்களுக்கு நன்மை நிறைய இருக்கு, ஷேர் ஆட்டோவாஹ நிறைய பேருக்கு வாழ்வாதாரம் yendur என்று யாராவது சொன்னால் அது மிகப்பெரிய பொய் தான் . ஏனெனில் ஷேர் ஆட்டோ இல்லாத பொது மக்கள் நிம்மதியாக பஸ், மினி பஸ் மற்றும் பிற ஊர்திகளை பயன்படுத்தி நிம்மதியாக இருந்தார்கள் என்பது தான் உண்மை . இவர்களை விதிமீறல்கள் இல்லாமல் ஷேர் கார் ஒட்டும்படி செய்யலாம் . மதுரையில் ஷேர் ஆட்டோ ஒழிந்தால் மதுரை மக்கள் அரசுக்கு நன்றி கடன் பட்டவர்களாக இருப்பார்கள் .

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    எந்த பர்மிட் வழங்கினாலும் குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாயாக இருக்கனும். சென்னையைப்போல பத்து ரூபாய் என்று கொள்ளை அடிக்க அனுமதிக்க கூடாது.

Advertisement