dinamalar telegram
Advertisement

டில்லி முதல்வராக இன்று பதவியேற்கிறார் கெஜ்ரிவால்

Share
புதுடில்லி: ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வராக, மூன்றாவது முறையாக, இன்று பதவியேற்கிறார். அவருடன், ஆறு அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

டில்லி சட்டசபைக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், 62 தொகுதிகளில் வென்று, ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை தக்க வைத்துள்ளது. பா.ஜ., எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

சிபாரிசு



அரவிந்த் கெஜ்ரிவாலை, டில்லி முதல்வராக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் இரவு நியமித்தார். கெஜ்ரிவாலின் பரிந்துரையை ஏற்று, ஆறு பேர் அமைச்சர்களாக பதவி யேற்கவும், அவர் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், கெஜ்ரி வால் இன்று காலை, 10:00 மணிக்கு, மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார்.அவருடன், மனிஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் உசைன், ராஜேந்திர கவுதம் ஆகியோர் அமைச்சர்களாகபதவியேற்கின்றனர்.

பதவியேற்பு விழா, டில்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கிறது. கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்களுக்கு, டில்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் பங்கேற்க, பிரதமர் மோடி, டில்லியைச் சேர்ந்த, பா.ஜ.,வின் ஏழு எம்.பி.,க்களுக்கு மட்டும், கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து உள்ளார்.

விருந்து



வேறு எந்த கட்சி தலைவர்களுக்கும், அழைப்பு விடுக்கவில்லை. அமைச்சர்களாக பதவியேற்க உள்ள ஆறு பேருக்கும், கெஜ்ரிவால் நேற்று இரவு விருந்தளித்தார். அப்போது, பதவியேற்றவுடன், அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து, அவர்களுடன் கெஜ்ரிவால் விவாதித்தார்.

துணை முதல்வரும், கல்வித்துறை அமைச்சருமான மனிஷ் சிசோடியா கூறியதாவது: பஸ்களில் மாணவர்களுக்கு இலவச பயணம், பள்ளி பாடத்திட்டத்தில் தேசபக்தி பாடம் சேர்ப்பு, வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் சப்ளை, காற்று மாசை குறைக்க நடவடிக்கை ஆகிய திட்டங்கள், செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • murasoli padikatha HinduIndian - Vannarapet,இந்தியா

    இப்போ இருக்குது பார் இவருக்கு ஆப்பு. பணம் இல்லாத போண்டி கோவெர்மென்ட் எப்படி இலவசம் கொடுக்குது என்று பார்க்கலாம். ஆப்போஸிஷன் ஆட்கள் யாரையும் கூப்படலே. மோடிகிட்ட பம்முறாரு கெஜ்ரி. மோடி எதாவது தட்டுலே போடுவாரா என்று.

  • Samaniyan - Chennai ,இந்தியா

    His first duty will be to deal with CAA protesters. It is hoped that he will be fair and not play politics as it is his paramount duty to protect the integrity of India.

Advertisement