Advertisement

யாருக்கும் பத்தாத பட்ஜெட்: ஸ்டாலின் விமர்சனம்

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக சட்சபையில் இன்று (பிப்.,14) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசின், 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், காலை, 10:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தகுதிநீக்க வழக்கில் உள்ள 11 எம்எல்ஏ., க்களில் ஒருவராக இருக்கும் ஓபிஎஸ், 10வது முறையாக பட்ஜெட் வாசித்துள்ளார். இந்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். இந்த பட்ஜெட்டை ஓபிஎஸ் 196 நிமிடங்கள் வாசித்தார். இதில் கூட மத்திய பாஜ., அரசை அதிமுக பின்பற்றி வருகிறது.
பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை, கடன்சுமை தான் தொடர்ந்து இடம் பெறுகிறது. திமுக 2011ல் ஆட்சியில் இருந்து விலகிய போது ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை தற்போது 3 மடங்கு உயர்ந்து ரூ.4 லட்சம் கோடியாக உள்ளது. இதில் தொலைநோக்கு திட்டமோ, வளர்ச்சி திட்டமோ இடம் பெறவில்லை. குறிப்பிட்ட சில அமைச்சர்களின் இலாகாக்களில் மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மர்மம் என்ன என்பது தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மக்களின் மீது கடன் சுமையை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தலைக்கும் ரூ.57 ஆயிரம் கடனை சுமையாக்கியுள்ளனர். 11 எம்எல்ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது போல சபாநாயகரின் முடிவு நல்லதாக கூட இருக்கலாம். அமைச்சர் ஜெயகுமார் டில்லிக்கு சென்று, அமைச்சர்களை சந்தித்து ஒரு ரகசிய கடிதம் வழங்கியுள்ளார். அதில் என்ன இருக்கிறது என்பதை இன்று மாலைக்குள் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (53)

 • R.Ganesan - Chennai,இந்தியா

  86 யும் 9 யும் கூட்டி97 னு சொன்ன மேதை நீ. (கூட இருந்தவர் தவறு என்று சுட்டிக்காட்டிய பின்பும் அதையே சொன்னாய்). குடியரசு நாளையும் சுதந்திர நாளையும் கூட சரியாக சொல்ல தெரியாதவன் நீ. ஒரு நிழல் பட்ஜெட் வெளியிட்டு எந்தெந்த துறைக்கு நீயாக இருந்தால் எவ்வளவு ஒதுக்குவாய் என்று சொல்ல வேண்டியது தானே . அதற்கு துப்பில்லாத உன்னை போன்றவர்களுக்கும் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம், பென்ஷன் போன்றவற்றால் தான் அரசுக்கு நிதிச்சுமை. கடன்சுமை குறைய நீ என்ன திட்டம் வைத்திருக்கிறாய் என்று கொஞ்சம் சொல்லேன். இதெல்லாம் செய்தால் Kishore இல்லாமலே நீ ஜெயிக்கலாமே.

 • kumzi - trichy,இந்தியா

  டேய் கோணவாயா ஒனக்கு பட்ஜட்னா என்னனு தெரியுமா கோமாளி

 • CSCSCS - CHENNAI,இந்தியா

  பட்ஜெட்டுல துண்டு விழத்தான் செய்யும் . எல்லாம் இது வரை கழகங்களின் ஆட்சியின் லட்சணம் இது . வாங்கிய கடனுக்கு கட்ட வேண்டிய வட்டியும் கூட துண்டுக்கு காரணம் . ஏதோ இவர்கள் ஆட்சியில் இருந்த போது துண்டு இல்லாமல் இருந்தது போல உளறுகிறார் . சேது சமுத்திர திட்டம் போன்ற மக்களுக்கு பயனற்ற திட்டங்கள் மூலம் பயன் அடைந்தது யார் ?. இந்த மாதிரி திட்டங்களும் பட்ஜெட் துண்டுக்கு மறை முக காரணம்

 • அருண், சென்னை -

  எல்லாம் உங்க குடும்பம் சொரண்டிட்டா தமிழக மக்கள் கடன் சுமை ஏரும்தான்... எங்கே சொத்து சேர்த்ததில் இருந்து கொஞ்சம் தமிழ் நாட்டுட்டோட கடனை அடைக்க வேண்டியதுதனே?

 • இந்தியன் -

  அய்யா தொளபதி தயவுசெய்து அறிந்து பேசவும். உமக்கு என்ன தெரியும்.. திருட மட்டுமே தெரிந்த உனக்கும் உன் தந்தைக்கும் வேறு என்ன தெரியும்..

Advertisement