Advertisement

ஊழலில் ஊறிய குடும்பம்: ராகுலுக்கு பா.ஜ., பதிலடி

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ஊழல் என்பது ஆன்மாவிலேயே ஊறி போய் உள்ள ராகுலுக்கு நல்லது பற்றி எப்படி பேச தெரியும் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டதன் முதலாம் ஆண்டை அனுஷ்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட காங்., எம்.பி.,ராகுல், இந்த தாக்குதலால் பலனடைந்தவர்கள் யார் என்பது உள்ளிட்ட 3 கேள்விகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பா.ஜ.,வின் சம்பித் பத்ரா பதில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், அது கொடூரமான தாக்குதல். இது கொடூரமான கருத்து. யார் அதிகம் பயனடைந்தது? ராகுல் அவர்களே பலன் பெறுவதை தாண்டி உங்களால் சிந்திக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. ராகுல் குடும்பத்திற்கே கிடைக்கும் பலனைத் தாண்டி சிந்திக்க தெரியாது. பொருட்களில் மட்டும் ஊழல் இல்லை. அவர்களின் ஆன்மாவிலும் ஊழல் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (52)

  • vbs manian - hyderabad,இந்தியா

    சூப்பர்

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    ராகுல் நாக்கில் விஷம். கக்குகிறார். இவருக்கு இந்தியாவின் மேல் அக்கறை இல்லை. இவருக்கும், இவர் குடும்பத்திற்கும், பதவியில் இருந்துகொண்டு சொத்துக்களை சுரண்டி இத்தாலிக்கும், தாய்லாந்துக்கு கொண்டு போகவேண்டும்.

  • kulandhai Kannan -

    Who benefited from Sanjay Gandhis death?? Who benefited from Indira Gandhis death?? Who benefitted from Rajiv Gandhis death?? Can Rahul answer??

  • MIRROR - Thamizhagam,இந்தியா

    நேரு குடும்பம் ஊழல் குடும்பம் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் இட்ட குடுமபம்

    • raja - chennai,இந்தியா

      அன்று மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு நாட்டுக்காக thanathu சொத்துக்களை கொடுத்து மக்களுக்கு தொண்டு செய்தார்கள் இந்திராவும் ராஜிவ் காந்தியும் நாட்டுக்கு உயிரை கொடுத்தனர் . ராகுல் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருக்கு அதற்காக அவரை மட்டமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.. இந்த உலகம் இந்தியாவை திரும்பி பார்ப்பது நேருவின் சமாதானம் கொள்கை... ராஜீவின் கண்ணனியை இந்தியாவில் விரைவாக படமாக கொண்டுவர செய்தது... ஒரே கேள்வி. உன் வீடு சொத்தை நாட்டுக்காக கொடுக்க முடியுமா.. ஆனால் நேரு குடும்பம் செய்தது..

    • Aarkay - Pondy,இந்தியா

      சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுத்த குடும்பம் அவரைவிட பல தியாகங்களை எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தங்கள் வாரிசுகளை அரசியலில் இறக்கிவிடாமல், சுதந்திரப்போராட்டத்தில் பலர் செய்துள்ளனர் காந்தி குடும்பமோ, படேல் குடும்பமோ, வஉசி குடும்பமோ, ஜான்சி ராணி குடும்பமோ, கட்டபொம்மன் குடும்பமோ, நேதாஜி குடும்பமோ, லால் பஹாதுர் சாஸ்திரி குடும்பமோ, திலகர் குடும்பமோ, பகத்சிங் குடும்பமோ, வாரிசு அரசியலை வளர்க்கவில்லை, வழி, வழியாய் தாங்களே நாட்டை ஆளவேண்டும் (ஆட்டயப்போடவேண்டும்-என படிக்கவும்) என்றும் அலையவில்லை. தலைமுறைகளுக்கு சொத்துக்களை குவிக்கவுமில்லை

  • வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா

    ஊழலில் ஊறிய குடும்பம்: ராகுலுக்கு பா.ஜ., பதிலடி :: அந்த குடும்பம் தான் ஊழல் செய்தாலும் எதையும் விற்று நாட்டை போண்டி ஆக வில்லை அனால் நீங்கள் நேர்மை நேர்மை என்று சொல்லி நாட்டை சுடுகாடு ஆகி ஒரு பொது துறை நிர்வாணத்தையும் விட்டு வைக்காத புண்ணியவான்கள் நீங்கள் , இவ்வலுவ நேர்மை பேசும் நீங்க மோடி யின் கூட்டத்திற்கு 20 கோடி செல்வாவு என்கிறார்கள் அப்போ 500 மீட்டிங் 10000 கோடி இது எப்படி நேர்மை கட்சிக்கு வருது விளக்குவீரா இல்லை இங்கே கும்மி அடிக்கும் அல்லக்கைகள் அடிமை சங்கிகள் சொல்லுவீரா

Advertisement