Advertisement

சீனாவில் கோவிட்19, காஷ்மீரில்...?: பி.டி.பி., எம்பி ஒப்பீடு

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மக்கள் ஜனநாயக கட்சியின் ராஜ்யசபா எம்பி.,யுமான பயஸ் அகமது மீர், சீனாவில் கோவிட்-19 வைரசையும், பொது பாதுகாப்பு சட்டத்தையும் (பிஎஸ்ஏ) ஒப்பிட்டு பேசியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆகஸ்டில் மத்திய அரசு ரத்து செய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் (பி.டி.பி) மெஹபூபா முப்தி ஆகியோர், கைது செய்யப்பட்டு வீட்டுக் காலவில் வைக்கப்பட்டனர். பரூக் அப்துல்லா மீது, ஏற்கனவே பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை, ஓராண்டு வரை சிறையிலோ அல்லது தடுப்புக் காவலிலோ விசாரணையின்றி வைக்க முடியும். இந்நிலையில், ஒமர்அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில், அவர்கள் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதாக, ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம், சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், பி.டி.பி., எம்பி பயஸ் அகமது மீர் கூறியதாவது: நம் நாட்டில் ஜனநாயகம் இருந்தாலும் நீங்கள் ஏதாவது சொன்னால் உங்கள் மீது பொது பாதுகாப்பு சட்டம் (பி.எஸ்.ஏ) என்னும் வைரஸை புகுத்துவார்கள். சீனாவில் கோவிட்-19 வைரசை போல, இந்தியாவில் பிஎஸ்ஏ வைரஸ் உள்ளது. அதனால்தான் காஷ்மீரில் பிரச்சினைகள் குறித்து பேச மக்கள் பயப்படுகிறார்கள். பார்லி., எம்பி.,யான நான் கூட பிஎஸ்ஏ குறித்து பேச பயப்படுகிறேன். இதற்காக கூட போலீஸ் என்னை கைது செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (19)

  • Siva Kumar - chennai,இந்தியா

    சரியான அறிவிலி.

  • Siva Kumar - chennai,இந்தியா

    இந்த மாதிரி பிரதிநிதியாக தேர்ந்தெடுத்ததுக்கு நம் மக்கள் வருத்தப்பட வேண்டும்.

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

    989 டு 1991 காஷ்மீரி அப்பாவி பெண்கள் குழந்தைகள் பட்ட பகலில் வெட்டபட்டு கொல்ல பட்டனர். பல இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதில் சிலர் மரம் அறுக்கும் மில்களில் வெட்டி கொல்ல பட்டனர். ஸ்ரீ நகர் வழிபட்டு தலங்களில் இருந்து காஷ்மீரி பண்டிட்களுக்கு தங்கள் மனைவியரை ஸ்ரீ நகரில் விட்டுவிட்டு உயிர் பிழைத்து ஓடுமாறு மிரட்டப்பட்டனர். பல வயதான முதியவர் குழந்தைகள் ஈவு இரக்கமில்லாமல் வெட்டி கொல்ல பட்டனர்.

  • bal - chennai,இந்தியா

    காஷ்மீரில் இவர் மற்றும் இவர் தலைவர்களை (முப்தி உமர் பாரூக்) உள்ளே வைத்ததால் வைரஸ் பரவவில்லை....

  • Ramesh - Bangalore,இந்தியா

    காஷ்மீர் அரசியல் குடும்பங்கள் காங்கிரஸ் குடும்பத்துடன் ஆடிய ஆட்டம் முஸ்லிம்கள் தம்முடன் வாழ்ந்த மக்களை மதம் என்ற வெறி பிடித்து கொன்று , வன்புணர்ச்சி செய்து , மதம் மாற வற்புறுத்தி 5000+ கொன்று & 5,00,000 பேர்களை துரத்திய கூட்டம் இன்று ஊளைஇடுகிறது ...சிவாஜியை நடிப்பில் தோற்கடிச்சுட்டாங்க ....

Advertisement