Advertisement

சபாநாநயகர் முடிவெடுப்பார்: 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : தமிழக அரசுக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம், நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது, காலக்கெடு விதிக்க முடியாது. அவரே முடிவெடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளது.

திமுக முறையீடுஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.முக., இரண்டாக பிரிந்தது. பன்னீர்செல்வம் தலைமையில், 11 எம்.எல்.ஏ.,க்கள் தனி அணியாக செயல்பட்டனர். இதையடுத்து, 2017 பிப்ரவரியில், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரியது.அப்போது, தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட, 11 எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். ஆனாலும், நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது. இவர்கள் மீது சபாநாயகர் தனபால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே, 11 பேரும் மீண்டும் இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.


இதையடுத்து, 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கக் செய்யக்கோரி, தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 'சபாநாயகர் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது' என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, தி.மு.க., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு, இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தை அணுகிய, தி.மு.க., தரப்பு, இந்த வழக்கை விரைவாக விசாரிக்கும்படி முறையிட்டது.

சபாநாயகருக்கு நோட்டீஸ்இதையடுத்து, இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், பிப்., 4 அன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: அரசுக்கு எதிராக ஓட்டளித்த, 11 எம்.எல்.ஏ.,க்கள் விஷயத்தில் முடிவு எடுக்க, சபாநாயகர் மூன்று ஆண்டுகளாக தாமதம் செய்தது ஏன்... இந்த விஷயத்தில், மூன்று ஆண்டு தாமதம் என்பது தேவையில்லாத ஒன்று. இதில், தமிழக அரசு முடிவு என்ன என்பது குறித்து, மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

காலக்கெடு விதிக்க முடியாதுஇந்நிலையில், இந்த வழக்கு இன்று(பிப்.,14) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது. சபாநாயகருக்கு காலக்கெடுவும் விதிக்க முடியாது. இந்த விவகாரத்தில், சபாநாயகர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறோம் என தெரிவித்து நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (59)

 • kulandhai Kannan -

  இலவு காத்த கிளி ஒரு மெகா சீரியலாகிறது

 • Krishna - bangalore,இந்தியா

  Since V.Long, Courts have Lost Supreme People’s Confidence for NEUTRAL-UNBIASED JUSTICE By their Extreme Bias With Complainants-Police & Officials-Media-Rulers, Just for their Selfish Vested Interests (Pay & Promotions, Power, Strength Increase, Advocates Livelihood etc). Hence, ABOLISH ALL COURTS (with all Incumbents without Any Benefits) NOT PUNISHING FALSE COMPLAINANTS, MAL-PROPAGATING MEDIA, POWER MISUSING OFFICIALS (incl. Case-Cooking Police) & RULERS (also Dead Slow, Poor Quality, V.Costly, Non-Simple Procedured, Never Encouraging Litigants to fight themselves). 95% COURTS WILL VANISH But NEW COURTS from Non-Advocates with good Post-ion Training in Law. Though Possible, Elected Reps Wont Do (Anti-People) for Selfishly Extracting Benefits from All Officials (esp. Police & Judges). Higher Judiciary (Parliamentary Justice Committee for SC Judges) also Wont Punish All Erring Judges in Auto-Appeals. TO SOLVE BURNING PROBLEMS, Simply FIGHT FOR EVERY YEAR ELECTIONS (Non-Costly)-Elected Reps wont Forget Supreme People, Compel VVV Fattened Officials to Work Properly for People & Will Not Have Time to Loot. Broadbased PEOPLE'S REP COMMITTEES headed by Loksabha MPs (atleast 50% from All-Erstwhile Oppositions-MP, MLAs-Ward Counsillors) MUST ADMINISTER ALL ASPECTS OF PEOPLE’S LIFE (Incl. Justice). Otherwise Only GOD Can SAVE the Countries & World.

 • Dubuk U - Chennai,இந்தியா

  அந்த சமயத்தில் கொறடா யார் ? யாரின் உத்தரவை கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கடைபிடிக்கவேண்டும்? உண்மையில் 122 பேரை தகுதி நீக்கம் செய்ய சொல்லியிருந்தாலும் பரவாயில்லை... காரணம் அந்த 11 பேரில் ஒருவர் தான் அப்போதைய கொறடா ..

 • குமார் தென்காசி -

  கோவிந்தா கோவிந்தா வெஙட் ரமணா கோவிந்தா ஏழு குண்டல வாடா கோவிந்தா முதல் அமைச்சர் கனவு கோவிந்தா கோவிந்தா கோவிந்தா அதிமுகவுக்கு ஜே

 • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

  DMK is wasting their time and others instead of doing any useful service to the people. By hook or crook Stalin wants to demolish Edappadi Ministry and occupy CM Chair. Now that Rajini is going to be in 2021 election DMK's chances to capture power is not possible. Tamilnadu people want a third capable leader other than Dravidian Party Leaders to be in power. Tamilnadu is getting ruined with TASMAC Liquor and the Tamil cinemas.

Advertisement