Advertisement

வைரஸ் பிடியிலும் வற்றாத அன்பு: முதிய தம்பதியின் நெகிழ்ச்சி வீடியோ

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவில் 'கோவிட்-19' என பெயிரிடப்பட்டுள்ள, 'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்ட வயதான கணவன், மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது, மனைவிக்கு பாசமாக கணவன் தண்ணீர், உணவு அளிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சீன நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லியின் டுவிட்டர் பக்கத்தில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட தம்பதியின் வீடியோ வெளியிடப்பட்டது. அதில், 87 வயதான கணவர், பக்கத்து வார்டில் அனுமதிக்கப்பட்ட தன் மனைவியை பார்க்கிறார். அசைவின்றி படுத்திருக்கும் மனைவிக்கு உணவு மற்றும் தண்ணீரை ஊட்டுகிறார். இருவரும் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த வயதிலும் மனைவிக்கு உதவும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் சூழலில், நோய் பாதித்த மனைவியிடம் அவர் காட்டும் அன்பும் காதலும் வீடியோவை பார்க்கும் அனைவர் மனதையும் கரைத்துவிடுவதாக உள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்த பீப்பிள்ஸ் டெய்லி நாளிதழ், ஒவ்வொரு நாளும் நான் உன்னை நேசிப்பேன் என குறிப்பிட்டுள்ளது. வைரலான இந்த வீடியோ மூலம், இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக பலரும் பதிலளித்துள்ளனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • சீனு, கூடுவாஞ்சேரி - ,

    சினிமா மாயையில் திளைத்திருக்கும் டாஸ்மாக்கினர்க்கு டீ ஆத்துரவனின் சொந்த கதையைப் பற்றித்தான் நினைவு. உலகமே போற்றுகிறது அந்த டீ ஆத்துனவனை. சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு. அவர் இமயமலை. நீயெல்லாம் எப்போ திருந்தறது. இப்படியே ஓசி டீ குடித்துவிட்டு வம்பு பேசிவிட்டு போய் சேர வேண்டியது தான்.

  • மாட்டுக்குப்பன் -

    எங்க ஊர்ல ஒருத்தர் டீ ஆத்துனார்யா அவரு பொன்டாட்டிய அப்படிதான்யா பார்த்துகிட்டாரு அதபார்த்து இந்த மும்பை ராமனுக்கு கூட போறாமையா???

    • sivan - Palani

      சிலருக்கு நல்லதே நினைக்க தோன்றாது எதை பார்த்தாலும் வில்லங்கமாக நினைக்க மட்டுமே தோன்றும் டி ஆற்றியவர் எல்லாம் மக்கள் சேவை செய்து எங்கோ போய் விட்டார்கள். இவர் மட்டும் டி ஆற்றியதையே நினைத்து நொந்து நூலாகி போய் கொண்டிருக்கிறார்

  • Ram Sekar - mumbai ,இந்தியா

    நீ என்ன சொல்ல வர்ற ?

  • மாட்டுக்குப்பன் -

    . அவுங்கள அப்படிதான் பார்த்துபார்.

  • மாட்டுக்குப்பன் -

    . அவுங்கள அப்படிதான் பார்த்துபார்.

Advertisement