Advertisement

அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா: பட்ஜெட்டில் அறிவிப்பு

Share
சென்னை: இன்று (பிப்.,14) தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின், 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், காலை, 10:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன.

* பெண்கள் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட நிர்பயா திட்டத்தின் மூலம் அரசு பேருந்துகளில் ரூ. 75.02 கோடி செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

பட்ஜெட்டில் மேலும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்:*ஏழைக்குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.,யுடன் இணைந்து, அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் ரூ.250 கோடியில் செயல்படுத்தபட உள்ளது. இதன்மூலம், இயற்கை மரணம் அமைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2லட்சம் வரை இழப்பீடு; விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
*ஆழ்கடல் மீனவர்களை தொடர்புகொள்ள இஸ்ரோ கண்டறிந்த டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்தப்படும். 4997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் இந்த தகவல்தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்.
*கிராம தன்னிறைவு வளர்ச்சி திட்டம் என்ற புதிய 5 ஆண்டு தன்னிறைவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குடிநீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, உணவு, பாதுகாப்பு, அணுகுசாலை கட்டமைப்பு, இடுகாடுகள், தெருவிளக்குகள், வீட்டுவசதி, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு போன்றவற்றில் கிராம அளவில் தன்னிறைவு அடைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
*மாமல்லபுரத்தின் சுற்றுலா மேம்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதற்காகன சிறப்பு தொகுப்பு திட்டம் 563 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
*பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் '' தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்'' அமைக்கப்படும்.
*நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.77.94 கோடியில் மெகா உணவு பூங்கா அமை்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் , கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரையில் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.
*தூத்துக்குடி அருகில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகம் ரூ.49,000 கோடியில் அமைக்கப்படும் *ரொக்கமில்லா பரிவர்த்தனை முறையை அமல்படுத்த அனைத்து பஸ்களிலும் விரைவில் மின்னணு பயணச்சீட்டு முறை அமல்படுத்தப்படும்
*அண்ணாமலை பல்கலையுடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்று கொண்டு, அது கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும்
*சென்னை பெங்களூரு தொழில் வழித்தட திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,966 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
* சேலம் மாவட்டம், புத்திரகவுண்டம்பாளையம், உமையாள்புரம் பகுதிகளில் 2 இடங்களில் சிப்காட் அமைக்கப்படும்.
*காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலம் எடுக்க ரூ.700 கோடி ஒதுக்கீடு
*முத்திரைதாள் வரி 1 சதவீதத்தில் இருந்து0.25 சதவீதம் குறைப்பு
*ஒப்பந்தங்கள் தொடர்பான பதிவு கட்டணங்களும் 1 சதவீதத்தில் 0.25 சதவீதமாக குறைக்கும்.
* ஈரோட்டில் மஞ்சள் மையம்,தென்காசியில் எலுமிச்சைமையம், தூத்துக்குடியில் மிளகாய் மையம்
*நெடுஞ்சாலை துறையில் சாலை பாதுகாப்பிற்காக புது பிரிவு அமைக்கப்படும்
*சென்னை, கோவை, மதுரை மாநகராட்சியில் சாலை பாதுகாப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும்
*தமிழகத்தில் உள்ள சிறைகளில் மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படம்
*பொது விநியோக திட்டத்தில் 2020- 21ல் பருப்பு, சமையல் எண்ணெய் வழங்குவது தொடரும்
*3 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும்.
*கிறிஸ்துவ தேவாலயங்கள் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடி உயர்த்தி வழங்கப்படும்.
*மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி 60 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்*ஸ்மார்ட் ரேசன் கார்டு இருந்தால் எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்
* ஹார்வர்டு, ஹூஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலை கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன
* கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு ரூ.10 கோடி மானியம்
* முதல்வரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக 20 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும்
* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
* நெல், சிறுதானியம், பயறு வகைகள், பருத்தியில் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்
* பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் வகையில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓ.-க்களுக்கு அதிகாரம்
*நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக இருக்கும். மொத்த வருவாய் ரூ.2,19,375 கோடியாகவும், செலவு 2,41,601 கோடியாகவும் இருக்கும். பற்றாக்குறை ரூ.22,226 கோடியாக இருக்கும்.
*தமிழக பொருளாதார வளர்ச்சி 7.27 சதவீதமாக இருக்கும்.
*ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும்.

அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நிதிமேட்டூர் உபரி நீரை, சேலத்தில் வறண்ட பகுதிகளுக்கு மாற்றி விடும், சரபங்கா நீரேற்று பாசன திட்டத்தை செயல்படுத்த ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவினாசி நீர்பாசன திட்டத்திற்கு ரூ.500 கோடியும், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த நிலமெடுக்க ரூ.700 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்லணை கால்வாய் அமைப்பு பணிகள் ரூ.2,298 கோடியில் மேற்கொள்ளப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்லபாக்கம் ஏரியை மீட்டெடுக்க ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பருவகால மாற்ற தழுவர் திட்டத்தை செயல்படுத்த ரூ.105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில்,1364 நீர்பாசன பணிகள் ரூ.500 கோடியில் மேற்கெள்ளப்படும். கூவம், அடையாறு நதிகளின் அனைத்து வடிகால்களையும் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதன் வடிகால்களையும், சீரமைக்க ரூ.5,439.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  சோ, சிசிடிவி மூலம் அடுத்த கொள்ளைக்கு ஆயத்தமாகி விட்டீர்கள். முதலில் ஓட்டை, உடைசல் இல்லாமல் போதிய அளவு பேருந்து விடுங்கள். பிறகு சிசிடிவி வைத்து கழட்டலாம். பள்ளிக் குழந்தைகள் எல்லாம் பஸ்ஸில் தொங்கிக் கொண்டு போவதை பார்க்கும் பொழுது மனது பதைபதைக்கிறது.

 • Girija - Chennai,இந்தியா

  பேருந்துகள் மழையில் ஒழுகாமலும், படிக்கட்டுகள், சீட் , கையை கிழிக்கும் தகரம், அடியில் ஓட்டை இல்லாமலும் இருந்தாலே நிஜ (நிர்) பயமின்றி மக்கள் பயணிக்க முடியும் . ஒழுகும் ஓட்டை ஒடிசல் பேருந்துகள் இருக்கும் லட்சணத்தில் CCTV பொருத்தி என்ன பிரயோஜனம்? ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு அரிய வாய்ப்பு , இதன் மூலம் ஊழல் விசாரணை கமிஷன் வர வாய்ப்புள்ளது, பத்து வருஷம் ஓட்டலாம் . தர்ம யுத்தம் தூத்துக்குடி

 • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

  இஸ்ரோ கண்டறிந்த டிரான்ஸ்பாண்டர்கள் படகுகளில் பொருத்த கார்பொரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி பண்டு ஏன் பயன் படுத்த முயற்சி செய்ய கூடாது? சென்னை தனியார் நிறுவனங்கள் ஏன் மீனவர்கள் குப்பம் மற்றும் அவர்கள் அடிப்படை வசதிகள் செலவிட கூடாது? மற்றும் இளைய மீனவ சமுதாயத்தினர்கு ஒரு வாய்ப்பு அமையும் அல்லவா கலந்து ஆலோசிக்க இத்தகைய நிறுவன அதிகாரிகள் மற்றும் வேலை செய்பவர்களுடன்.

 • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

  மசூதி-கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்றவற்றுக்கு அரசு நிதி ஒதுக்குவது தவறு. இவர்களின் வருமானங்கள் யாவும் அரசுக்கு வருவதில்லை. ஆனால் கோவில்களின் வருமானம் அரசு கைக்கு போகிறது. கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு அறங்காவலர்கள் கையில் ஒப்படைக்கப்படவேண்டும். ஹிந்துக்களுக்கு ஒரு ஞாயம், மற்ற மாதங்களுக்கு ஒரு ஞாயமா. இந்த கேட்டுக்கு பெயர் தான் மத சார்ப்ற்ற அரசா.

 • Rathinakumar KN - Madurai,இந்தியா

  அரசு பஸ்சில் ஒரு காலத்தில் வைத்த டீவியே ஒழுங்காக வேலை செய்யாது. இதில் CCTV வச்சா விளங்கிடும். ஒரு மாசத்தில் எல்லாம் CCTV கழண்டு தொங்க ஆரம்பிக்கும். பயணிகள் ஒவ்வொன்னா புடுங்கி வீட்டுக்கு கொண்டு போவார்கள். மக்கள் வரிப்பணம் வீணடிக்க படும். இவங்க பஸ்சை முதலில் ஒழுங்கா பராமரிப்பு செய்யட்டும்

Advertisement