Advertisement

தமிழக பட்ஜெட்: துறை வாரியாக ஒதுக்கீடு எவ்வளவு?

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ்., தாக்கல் செய்த பட்ஜெட்டில், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:

உணவு மானியம் - ரூ.6,500 கோடி
பள்ளி கல்வித்துறை -ரூ.34,181 கோடி
உயர்கல்வித்துறை -ரூ.5,052.84 கோடி
மின்சார துறை- ரூ. 20,115.58 கோடி
மருத்துவ கல்லூரி நிறுவ -1200 கோடி
சுகாதாரத்துறை - ரூ.15,863 கோடி
தமிழ் வளர்ச்சி துறை -ரூ.74.08 கோடி
தொல்லியல் துறை - ரூ.31.93 கோடி
போக்குவரத்து துறை- ரூ.2716.26 கோடி
பேரிடர் மேலாண்மை -1360 கோடி
சிறைச்சாலைத்துறை- 392 கோடி
எரிசக்தி துறை - 20,115.58 கோடி
கீழடி அகல் வைப்பகம் அமைக்க- ரூ.12.21 கோடி
அம்மா உணவக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த -100 கோடி
நெடுஞ்சாலை துறை- ரூ.15,850 கோடி
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி
பயிர்க்கடன் - ரூ.11 ஆயிரம் கோடி
கால்நடை வளர்ப்பு-ரூ.199 கோடி
வேளாண்மை துறை -11,894.48 கோடி
அம்ரூத் திட்டம் ரூ.1450 கோடி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ. 18,540 கோடி.
குடிமராமத்து திட்டத்துக்கு - ரூ.300 கோடி
காவல்துறை - ரூ.8876.57 கோடி
தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை - ரூ.405.68 கோடி
சுற்றுலா துறை - ரூ.90 கோடி
மீன்வளத்துறை - ரூ.1,299.85 கோடி
இளைஞர் நலன் மற்றும் மேம்பாடு -ரூ.50.89
மாற்றுத்திறனாளிகள் நலன்-
ஜவுளித்தறி மற்றும் ஜவுளித்துறை - ரூ.1,224 கோடி
சம்பளங்கள் - ரூ.64,208 கோடி
ஓய்வூதியங்கள்- ரூ.32,009 கோடி
சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள்- ரூ.4,315 கோடி
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்- ரூ.959.21 கோடி
நீர் பாசனம்- ரூ.6,991 கோடி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (18)

  • G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா

    மக்களுக்கான நிதி நிலை அறிக்கை தமிழக பட்ஜெட் இன்று (பிப்.,14) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ் அவர்கள் மிக தெளிவாக தாக்கல் செய்த பட்ஜெட்டில், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மன திருப்த்தி அளிக்கின்றது. எதிர் கட்சிகள் குறை கூறுவார்கள், ஆனால் எதிரி கட்சிகளுக்கு போதாத பட்ஜெட் ,அதற்கு காரணம் அவர்களின் கொள்கை வேறு. அரசு ஊழியர்கள் நேர்மையாக நடந்து கொண்டாலே போதும்,மக்கள் வளர்வார்கள், வாழ்த்துவா்கள்.

  • devan - sivakasi,இந்தியா

    பள்ளி கல்வித்துறைக்கு தான் உயர்கல்வித்துறையை விட ஏழு மடங்கு அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • devan - sivakasi,இந்தியா

    Mr சீனி நல்லா பாருங்க பள்ளி கல்வித்துறை -ரூ.34,181 கோடி உயர்கல்வித்துறை -ரூ.5,053 கோடி . உயர் கல்வி துறையை விட பள்ளி கல்வித்துறைக்கு தான் ஏழு மடங்கு ஒதுக்கப்பட்டுள்ளது

  • v.s.raj - COIMBATORE,இந்தியா

    Most of the above are legacy of the past

  • சீனி - Bangalore,இந்தியா

    கிராமப்புற 8-12ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் சிறப்பு விவசாய பயிற்சிக்கு, சனி ஞாயிற்று கிழமைகளில் விவசாய பண்ணை அமைத்தல், பட்டுப்புழு வளர்த்தல், சொட்டுனீர் பாசனம், விளைந்த பொருட்களை மதிப்பு கூட்டுதல், உணவு பதப்படுத்துதல், கால்நடைகளை முறையாக பராமரித்தல், போன்ற தொழில்களுக்கு கொஞ்சம் பட்ஜெட் தனியாக ஒதுக்கவும். இவர்களும் எதிர்காலத்தில் விவசாய தொழில் அதிபர்களாக மாறி சம்பாதிக்க கற்றுக்கொள்வார்கள். இதற்க்கு அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களை இலவசமாக வருடம் 3-6(ஏப்ரல் முதல் செப் மாதம் வரை) மாதம் பயிற்சி கொடுக்கலாம், விவசாய பட்டப்படிப்பு படித்த எத்தனையோ பேர் இதற்க்கு ஆசிரியராக வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விவசாயம் செய்யும் பெற்றோருக்கும் உதவியாக இருந்து குடும்ப வருமானத்த்தை பெருக்குவர். ஒருவருக்கு விவசாயதிற்க்கு ஆர்வம் ஏற்ப்படுத்த சிறு வயது முதலே பழக்கவேண்டும். ஆகாயத்தில் இருந்து குதித்து விவசாயம் கற்றுக்கொள்ள முடியாது.

Advertisement