Advertisement

யார் யாரோ அரசியலுக்கு வரப்போறாங்கன்னு சொல்வாங்க

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

கடலுார் : 'அரசியலுக்கு யார் யாரோ வராங்க; வரப்போறாங்கன்னு சொல்வாங்க; நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம்' என, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், வடலுாரில் இளைஞர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கி, அவர் பேசியதாவது:தி.மு.க., சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து வாங்க வேண்டும் என கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டார். பொதுமக்கள் தன்னெழுச்சியாக கையெழுத்திட்டதால், 2 கோடியை தாண்டியது.
இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்படும் என்றேன். இது சாத்தியமா என கேள்வி எழுப்பினர். சட்டசபை இடைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என, பல்வேறு பணிகள் இருந்தாலும், இளைஞரணி அமைப்பாளர்கள், மாவட்ட செயலர்களின் ஒத்துழைப்போடு 80 சதவீதம் இலக்கை அடைய முடிந்தது.

கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதிகளில் தலா ஒரு தொகுதிக்கு 10,000 பேர் வீதம், 50,000 பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 31,328 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் கொள்கை பிடிப்போடு உள்ளவர்களை தேர்வு செய்து, இளைஞரணியி்ல் சேர்க்குமாறு மாவட்ட செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கூறினேன். அது போன்றே உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அரசியலுக்கு யார் யாரோ வராங்க; வரப்போறாங்கன்னு சொல்வாங்க. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் பேசியதைதான் இப்போதும் பேசுகின்றனர்.அடுத்தாண்டு வரப்போவதாக கூறுவார்கள். இதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்.இந்தியா முழுவதும் மோடிக்கு ஆதரவாக ஓட்டளித்தாலும் தமிழகத்தை பொறுத்தவரையில் அவருக்கு ஆதரவு கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் 75 சதவீதம் ஓட்டுகளை பெற்றோம். ஓட்டு எண்ணிக்கை சரியாக நடந்திருந்தால் 90 சதவீதம் வெற்றி பெற்றிருப்போம். தமிழக மக்கள் நல்ல முடிவு எடுத்து 2021ம் ஆண்டில் தி.மு.க., தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும்.அ.தி.மு.க., விற்கும், அக்கட்சியை வழி நடத்தி கொண்டிருக்கும் பா.ஜ., விற்கும் தகுந்த பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராக உள்ளனர்.இவ்வாறு, உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பின்னர், அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு சம்பந்தமாக சி.பி.ஜ., விசாரணை நடத்த வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது வெற்று அறிவிப்பு தான். மத்திய அரசின் கைக் கூலியாக தமிழக அரசு செயல்படுகிறது' என்றார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (149)

 • SIVA G india - chennai,இந்தியா

  தி.மு.க., சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து வாங்க வேண்டும் என கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆணையிட்டார்.🤣🤣மனபாடம் பண்ணவும்🤣 பொதுமக்கள் தன்னெழுச்சியாக கையெழுத்திட்டதால், 2 கோடியை தாண்டியது.🤔🤣🤣🤣 மனபாடம் பண்ணவும் 👉குடியுரிமை சட்டம்: கேள்வி பதில்களாக மத்திய அரசு விளக்கம் 🇮🇳🇮🇳🇮🇳s://www.dinamalar.com/news_detail.asp?id=2441064

 • Gandhi - Chennai,இந்தியா

  திருட்டுத்தனமாக ரயிலில் பயணம் செய்து பிழைத்த குடும்ப பின்னணியில் இருந்த வந்த நீயே அரசியலுக்கு வந்துட்டே.........

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  நீயே லைப் லோங் பெனிஷனுக்குவேண்டியேதான் எம் எல் ஏ ஆவப்போரே தென் எம்பி ஆவ் பேக்கு தமிழன் உன்னணியே சி எம் பண்ணுவான் என்று கனவுகாண்கிறே அரசியல்னா என்னானு தெரியாது உங்க நயினாக்கீ உன்னையும் இஸ்துகினு வந்துட்டாங்க போடப்போ வேறுவேலையிருந்தால் செய்ய (அதெல்லாம் இல்லே என்பது ஒலகறிஞ்ச மேட்டரு )

 • SENTHIL - tirumalai,இந்தியா

  இவன்லாம் ஒரு ஆளுன்னு.....

  • s.rajagopalan - chennai ,இந்தியா

   இவரே வந்தூட்டாரு ..இனி யார் வந்தால் என்ன ....என்ன தேனை வெட்டு பேச்சு...? அப்பா ...இவர் கட்சியை நிச்சயம் ஊத்தி மூடிடுவாரு "

 • mohandas - sydney,ஆஸ்திரேலியா

  உதயநிதி தி.மு.கவை. புதைத்து விடுவார் சந்தேகம் வேண்டாம்

Advertisement