Advertisement

படேலை ஒதுக்கினாரா நேரு? :ஜெய்சங்கர் - குஹா மோதல்

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : நாட்டின் முதல் பிரதமர் நேரு, துணை பிரதமர் சர்தார் படேல் இடையே இருந்த பனிப்போர் குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வெளியறவு அமைச்சர், பா.ஜ.,வை சேர்ந்த ஜெய்சங்கர், டுவிட்டரில் பதிவிட்டிருந்த கருத்தில் கூறியிருந்ததாவது:
சர்தார் படேலுடன் நெருக்கமாக பணியாற்றிய அதிகாரி, வி.பி.மேனன். இவரது வாழ்க்கை வரலாற்றை, நாராயணி பாசு என்பவர் எழுதியுள்ளார்.அந்தப் புத்தகத்தை படித்ததில், ஜவஹர்லால் நேரு, 1947ல் அமைத்த தனது முதல் அமைச்சரவையில், சர்தார் படேல் இடம் பெறுவதை விரும்பவில்லை; அமைச்சர்கள் பட்டியலில், படேல் பெயரை நேரு சேர்க்கவில்லை என, தெரிய வந்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும், ஆசிரியர் புத்கத்தில் தந்துள்ளார். இது விவாதத்துக்கு ஏற்ற தகவல்.
இவ்வாறு, ஜெய்சங்கர் கூறியிருந்தார்.இதற்கு, வரலாற்று ஆய்வாளர் ராமசந்திர குஹா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, டுவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.ராமசந்திர குஹா வெளியிட்ட பதிவில், 'சுதந்திரம் பெற்றதிலிருந்தே, இந்த கற்பனை உலவி வருகிறது. ஆனால், இதை, பேராசிரியர் ஸ்ரீநாத் ராகவன், தன் புத்கத்தில், வெறும் பொய் என்பதை நிருபித்துள்ளார்.

'நவீன இந்தியாவை உருவாக்கிய இரண்டு தலைவர்களுக்கு இடையே மோதல் இருந்ததாக, கற்பனையான தகவல்களை வெளியிடுவது வெளியுறவு அமைச்சரின் பணியல்ல; இதை, அவர், பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவிடம் கொடுத்து விடட்டும்' என, கூறியிருந்தார்.இதற்கு ஜெய்சங்கர், 'வெளியுறுவு அமைச்சர்கள் சிலர், புத்தகங்கள் படிப்பது வழக்கம். சில பேராசிரியர்களுக்கும், இந்த பழக்கம் இருக்கும். இந்த வகையில், நாராயணி பாசு எழுதியுள்ள புத்தகத்தை படிக்க பரிந்துரைக்கிறேன்' என, பதிவிட்டார்.

இதற்கு, குஹா, முதல் அமைச்சரவையில் சேரும்படி, படேலுக்கு நேரு எழுதிய கடிதத்தின் பிரதியை வெளியிட்டு, 'இந்த கடிதத்தை, ஜெய்சங்கரிடம் யாராவது காட்டட்டும்' என, கூறியிருந்தார். மேலும், 'ஜவஹர்லால் நேரு பல்கலையில், டாக்டர் பட்டம் பெற்றவர் ஜெய்சங்கர். அதனால், என்னை விட அதிகம் புத்தகங்கள் படித்திருக்கலாம். அதில், நேரு - படேல் இடையே நடந்த, கடித போக்குவரத்துக்கள் பற்றிய புத்தகமும் இருந்திருக்கும். அந்த புத்தககத்தை, ஜெய்சங்கர் மீண்டும் படிக்க வேண்டும்' என, குஹா பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், '2015ல் வெளியுறவு செயலராக பொறுப்பேற்பதற்கு முன், தான் படித்த புத்தகங்களை ஜெய்சங்கர் மறந்துவிட்டார் போலிருக்கிறது' என, கூறியிருந்தார். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் வெளியிட்ட பதிவில், 'அமைச்சரவையில் படேல் இடம் பெற கூடாது என, நேரு ஒரு போதும் நினைக்கவில்லை' என, கூறியிருந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (37)

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  விரும்பியா திமுகவின் பொருளாளர் பதவியை துரைமுருகனுக்கு கொடுத்து வைத்து இருக்கிறார் ஸ்டாலின். அல்லது விரும்பியா கனிமொழியை எம்.பி க்கு சீட் கொடுத்தாரு. அல்லது விரும்பியா உதயநிதியை இளைஞரணி தலைவராக எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அட கருணாநிதி விரும்பியா பொதுச்செயலாளர் பதவியில் அன்பழகனை விட்டு வைத்திருந்தார். அதுமாதிரிதான் சர்தார் வல்லபபாய் படேல். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் போன்ற உத்தமர்கள் துரோகத்தால் வீழ்ந்தார்கள்.

 • ravi - coimbatore,இந்தியா

  நாட்டின் வளர்ச்சி பற்றி எதாவது பேச்சு உண்டா .. வெட்டி பேச்சு ... இதனால் எதாவது நாட்டிற்கு பயன் உண்டா ... எதுக்கு இந்த மறைந்த போன விஷயத்தை பற்றி பேசுறதால சல்லி காசுக்கு மதிப்பு உண்டா ...

 • blocked user - blocked,மயோட்

  படேலை இழுப்பதை விட சுபாஷ் சந்திர போஸை எடுத்து விவாதிக்கலாம். என்ன அடிப்படையில் நேரு அவரை நாட்டுக்குள் வரவிடாமல் விரட்டி அடித்தார். இறந்த பின்னரும் கூட எந்த ஒரு நல்ல விஷயமும் சொல்லப்படவேயில்லை? வீரத்தனமாக அடித்து விரட்டப்பட வேண்டிய வெள்ளையர்களிடம் கெஞ்சிக்கூத்தாடி இம்சை செய்து சுதந்திரம் பெறவேண்டிய அவசியம் ஏன் வந்தது?

 • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

  நேருவின் தளபதி படேல். இன்னும் கொஞ்ச நாள் போன வாஜிபாய்க்கு பிடிக்காத ஒருவர் அத்வானின்னு கூட பேசுவாங்க. இது காலம் கடந்த வெட்டி பேச்சு.

 • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

  அத்வானியை ஒதுக்கினாரா மோடி?

Advertisement