Advertisement

24 மணி நேர குடிநீர் திட்டத்துக்கு தொட்டி கட்டுங்க! மாநகராட்சி கமிஷனர் உத்தரவு!

Share
கோவை:கோவையில் செயல்படுத்தப்படும், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில், தொட்டி கட்டும் பணியை உடனடியாக துவக்க, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும், 24 மணி நேர குடிநீர் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம், பிரதான அலுவலகத்தில் நேற்று நடந்தது; துணை கமிஷனர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார்.
பணி முன்னேற்றம் தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன் குமார், தனியார் நிறுவன அலுவலர்களுடன் விவாதித்தார்.'ஆர்.எஸ்.புரம் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை, 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட, 60 வார்டுகளில், 32 தொட்டிகள் கட்ட வேண்டும்; கட்டுமான பணிக்கு, நான்கு ஆண்டுகள் ஒதுக்கியிருந்தாலும், பணியை இப்போதே துவக்கி, சீக்கிரமாக முடிக்க வேண்டும்.
குடிநீர் கசிவு ஏற்படுவது தெரியவந்தால், உடனடியாக சீரமைக்க வேண்டும்' என, கமிஷனர் அறிவுறுத்தினார்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், '24 மணி நேர குடிநீர் திட்டத்தில், தனியார் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தப்படி, பணிகள் படுவேகமாக நடந்து வருகின்றன. கடந்த எட்டு மாதங்களில், 6,000க்கும் மேற்பட்ட நீர் கசிவுகள், சரி செய்யப்பட்டு உள்ளன.
குடிநீர் கசிவு, கழிவு நீர் கலப்பு, குழாய் உடைப்பு, தரமற்ற குடிநீர் வினியோகம் போன்ற குறைகள் இருப்பின், 98650 60708 என்ற 'வாட்ஸ்அப்' எண்ணுக்கு தெரிவிக்கலாம்; 24 மணி நேரத்துக்குள் சரி செய்யப்படும்' என்றனர்.கூட்டத்தில், நகர பொறியாளர் லட்சுமணன், நிர்வாக பொறியாளர் ஞானவேல், 24 மணி நேர குடிநீர் திட்ட அலுவலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.குடிநீர் கசிவு, கழிவு நீர் கலப்பு, குழாய் உடைப்பு, தரமற்ற குடிநீர் வினியோகம் போன்ற குறைகள் இருப்பின், 98650 60708 என்ற 'வாட்ஸ்ஆப்' எண்ணுக்கு தெரிவிக்கலாம்; 24 மணி நேரத்துக்குள் சரி செய்யப்படும்.--மாநகராட்சி அதிகாரிகள்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement