Advertisement

மும்பை டப்பாவாலாக்களுக்கு இலவச வீட்டு மனை:மஹா.,அரசு முடிவு

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் 1890ல் இருந்து மதிய உணவு எடுத்துச் செல்லும் பணியில் "டப்பாவாலா'க்கள் செயல்படுகின்றனர். இத்தொழிலில் தற்போது 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். தினமும் வாடிக்கையாளர்களின் வீடுகளிலிருந்து மதிய உணவு பெற்று, 60 முதல் 70 கிலோ மீட்டர் பயணித்து, பணிபுரியும் இடங்களில் கொடுக்கின்றனர்.இவர்கள் தங்களுக்கு அரசு இலவச வீட்டு மனை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் நேற்று டப்பாவாலாக்கள் பிரதிநிதிகள் , தலைமை செயலகத்தில் துணை முதல்வர் அஜித் பவாரை சந்தித்து பேசினர்.அப்போது தங்களது கோரிக்கை வலியுறுத்தினர். இதையடுத்து டப்பாவாலாக்களுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டு மனை ஒதுக்கீடு செய்த அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

    இப்பவெல்லாம் "Uber Eats" என்று பிரமாதமா எல்லோரும் சொல்லுறாங்க, வெளிநாட்டு மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் வாரத்துக்கு ஒருஇலட்சம் ரூபாய்க்கு மேல் உழைக்கிறாங்க, பிரபல கிரிக்கெட், டெனிஸ் போட்டிகளுக்கு பல மில்லியன் ஸ்பான்சர் ஷிப் செலவு செய்யும் அளவுக்கு இரண்டுவருடத்துக்குள் அந்த ஸ்தாபனம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த செய்தியின் மூலம் 'Uber Eats" 1980 களிலே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்று அறிய கூடியதாக இருக்கு.

  • கல்யாணராமன் - Chennai,இந்தியா

    இவர்கள் ஏதோ நொட்ட போவதுபோல் தலைப்பு செய்தி. கடைசியில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் இருந்து ஏற்பாடு செய்வார்களாம்.

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    எந்த டப்பாவாலாவும் இலவச வீட்டு மனை வேண்டுமென்று போராட்டமோ ..உண்ணாவிரதமோ ..நடத்தவில்லை ..மும்பையில் வீட்டுமனை வழங்குவது கட்டுப்படியாகுமா … இறந்தவர்களை புதைக்கவே இடம் கொடுப்பதில் சிரமம் ..

Advertisement