Advertisement

எங்கிருந்தும் ஓட்டு போட வருகிறது தொழில்நுட்பம்

Share
புதுடில்லி :தேர்தலில் ஓட்டளிக்க விரும்பும் வாக்காளர்கள், சொந்த ஊரில் ஓட்டளிக்க முடியாமல் போனால், அவர்கள் வசிக்கும் ஊரிலேயே ஓட்டளிக்க கூடிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் உருவாக்கி வருவதாக, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார்.
நாடு முழுவதும், 90 கோடி மக்கள், தேர்தலில் ஓட்டளிக்க தகுதி அளிக்கும் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளனர். கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், 30 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை.
'பெரும்பாலான வாக்காளர்கள், வேலை, படிப்பு மற்றும் இதர சொந்த காரணங்களுக்காக, தங்கள் சொந்த ஊரில் இருந்து, வேறு ஊர்களுக்கு இடம் மாறி சென்று விடுவதால், தேர்தல் நாளில், அவர்களால் சொந்த ஊருக்கு வந்து ஓட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது' என கூறப்படுகிறது.இதற்கு தீர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை, தேர்தல் ஆணையம் தற்போது முடுக்கிவிட்டுள்ளது.
இது குறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறியதாவது:சொந்த ஊரில் பதிவு பெற்ற வாக்காளர், தேர்தல் நேரத்தில், நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் ஓட்டளிக்க வழி செய்யும் புதிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன்உருவாக்கி வருகிறோம்.

என்னுடைய பதவி காலத்திற்குள், அந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்காளர் அடையாள அட்டையை, ஆதாருடன் இணைக்கும் பரிந்துரை, மத்திய சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.சட்ட அமைச்சகத்துடன், வரும், 18ல் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின் போது, தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (29)

 • Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ

  MR Raghavan..Scientists at US University of Michigan re say they have developed a technique to hack into Indian electronic voting machines. After connecting a home-made device to a machine, researchers were able to change results by sing text messages from a mobile. India's Deputy Election Commissioner, Alok Shukla, for their tem to have any impact they would need to install their microchips on many voting machines, no easy task when 1,368,430 were used in the last general election in 2009. The problem is why EC KEPT SILENT WHEN HUNDREDS OF DISCREPANCIES WERE REPORTED . HISHONESTLY EC D TGE CONTROVERSIAL DATA THAT WERE REPORTING INCONSISTENT RESULTS.

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  This is the best news about voting. The EC should see that each adult Indian, whether he is in the local area or anywhere in the world should be able to vote. The NRIs do not have Aadhar or Voters ID. So all passport holders must be able to vote .In that case, everyone, whether they are NRI or are visiting relatives in foreign countries, or on tour at the time of elections can easily exercise their franchise. EC should make such elaborate arrangements.

 • R chandar - chennai,இந்தியா

  Good decision use all technology to poll from wherever in the world for the person who possess voter id which linked with Aadhar thru online tem or from the place nearby their stay

 • Indhuindian - Chennai,இந்தியா

  Election commission is desirous of making every Indian irrespective of his location to participate in the democratic electoral process. But I feel sorry for the commission. For decades they have been fighting the opposition and false allegations against the EVMs. Now they will start,irrespective of the safe guards provided to make such remote voting free from tampering, would cry hoarse and would find it a convenient excuse for their electoral debacle. Of course there are more than friendly media in India and abroad to support them.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  வங்கிகளில் எந்த கிளையில் இருந்தும் எங்கு வேண்டுமானாலும் பணம் எடுக்கவோ அல்லது பணம் போடவோ முடிகிறது அல்லவா, அதை போல் இதையும் செய்ய முடியாதா?

Advertisement