Advertisement

அரசு மருத்துவமனையில் தொழுநோய் கருத்தரங்கம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உலக தொழுநோய் கருத்தரங்கம், நடந்தது.செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், உலக தொழுநோய் குறித்த கருத்தரங்கம், கல்லுாரி முதல்வர் டாக்டர் பாலாஜி தலைமையில், நேற்று நடந்தது.


மத்திய தொழுநோய் போதனா மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர் வினித் கே.சத்தா உட்பட, பலர் பங்கேற்று பேசினர்.இங்கு, தொழுநோய் குறித்த கருத்தரங்கில், மருத்துவ கல்லுாரி மாணவர்கள் மற்றும் செவிலியர் கல்லுாரி மாணவியர் பங்கேற்றனர்.இந்த கருத்தரங்கில், மாமல்லபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் விஸ்வ நாதன், அரசு மருத்துவமனைக்கு, 50 பேன், 50 டியூப் லைட் ஆகியவற்றை, இலவசமாக வழங்கினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement