Advertisement

பணிபுரிந்த வீட்டில், ஆட்டை :1.75 கிலோ தங்கம் மீட்பு

Share
எழும்பூர்:பணிபுரிந்த வீட்டில், 'ஆட்டைய' போட்ட பெண் உட்பட, நான்கு பேரை கைது செய்த போலீசார், 1.75 கிலோ தங்கம், கார் மற்றும் 2 லட்சம் ரொக்கத்தை மீட்டனர்.


எழும்பூர், காசா மேஜர் சாலையைச் சேர்ந்தவர், கல்யாண்குமார், 40. இவரது வீட்டில் பணிபுரிந்த சேத்துப்பட்டைச் சேர்ந்த லோகநாயகி, 48, என்பவர், 8 சவரன் நகை, 2 லட்சம் ரூபாயை திருடி, வேலையை விட்டு நின்றார்.கல்யாண்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த எழும்பூர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட வேலைக்கார பெண் உட்பட, நான்கு பேரை இரு தினங்களுக்கு முன் கைது செய்தனர்.


அவர்களிடமிருந்து நேற்று, 1.75 கிலோ தங்கம், 'மாருதி ஷிப்ட்' கார் மற்றும் 2 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டன.சிறப்பாக செயல்பட்டு, திருட்டில் ஈடுபட்டோரை கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை, போலீஸ் கமிஷனர் வெகுவாக பாராட்டினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement