Advertisement

தற்கொலை, பலி

Share
விபத்தில் பூ வியாபாரி மரணம்


கோயம்பேடு: அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகரைச் சேர்ந்தவர் பட்டுரோசா, 75; பூ வியாபாரி. நேற்று முன்தினம் இரவு, நெற்குன்றம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அதிவேகமாக வந்த லாரி, அவர் மீது மோதியது. படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பட்டுரோசா, அன்றிரவே உயிரிழந்தார். விசாரித்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், லாரி ஓட்டுனர் தினேஷ் குமார், 34, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


உயிருக்கு எமனான, 'சிகரெட்'


புழல்: புழல் அடுத்த புத்தகரம், மகாதேவி நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் முத்து சுப்ரமணி, 57. இவர், அண்ணா நகரில், ஏற்றுமதி ஆடைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். அவர், வீட்டில் தனிமையில் இருந்தார். நேற்று அதிகாலை, 2:30 மணி அளவில், சிகரெட் பற்ற வைத்தபோது, சமையல், 'காஸ்' கசிவால், திடீரென தீ பிடித்தது. இதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த, மாதவரம் தீயணைப்பு படையினர், அங்கு சென்று தீயை அணைத்து, முத்து சுப்ரமணியின் சடலத்தை மீட்டனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தீ விபத்தில் மூவர் பலி


ஆயிரம்விளக்கு: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர், சுனில் சர்தார், 54. அவரது மனைவி, கிருஷ்ண சர்தார், 48. நேற்று முன்தினம் காலை, சென்னை வந்த இருவரும், ஆயிரம்விளக்கு, அப்பாஸ் அலிகான், இரண்டாவது தெருவில் உள்ள விடுதியில் தங்கினர். சமையல் காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதை அறியாமல், கிருஷ்ண சர்தார், அடுப்பை பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில், தம்பதி படுகாயம் அடைந்தனர். நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆயிரம்விளக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

* கோட்டூர்புரம்: ஆட்டோ ஓட்டுனர் தமிழ்குடிமகன், 34, தன் வாகனத்தில் பெட்ரோல் நிரப்பும் போது ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார். அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு


தாம்பரம்: மண்ணிவாக்கம், தெற்கு லட்சுமிநகர், 7வது தெருவைச் சேர்ந்தவர், இருதயம், 63. இவர், குரோம்பேட்டை, ராதா நகரில் உள்ள, உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்க, நேற்று காலை, குரோம்பேட்டை பஸ் நிலையம் வந்தார். ரயில் நிலையம் அருகே உள்ள, ரயில்வே கடவு பாதையை கடந்து, ராதா நகர் செல்ல முயன்றபோது, கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த, மின்சார ரயிலில் அடிபட்டு பலியானார். தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


ஊழியர் துாக்கிட்டு தற்கொலை


வில்லிவாக்கம்: வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித், 21; தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அஜித் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. வில்லிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement