Advertisement

இந்தியாவில் மத சுதந்திரம் மதிப்பிடப்பட வேண்டும்

Share
வாஷிங்டன்:: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா வர இருக்கும் நேரத்தில், 'காஷ்மீரில் நிலவும் மனித உரிமை நிலவரம் மற்றும் இந்தியாவில் நிலவும் மத சுதந்திர நிலை குறித்து மதிப்பிடப்பட வேண்டும்' என, அந்நாட்டைச் சேர்ந்த நான்கு எம்.பி.,க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

கடிதம்அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இம்மாதம், 24, 25ம் தேதிகளில் இந்தியா வருகிறார். 'அவரது பயணம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்டைச் சேர்ந்த நான்கு எம்.பி.,க்கள், அந்நாட்டு உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.

அதன் விபரம்:ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு தொலைபேசி மற்றும் 'இன்டர்நெட்' சேவைகள் துண்டிக்கப்பட்டன.முன்னாள் முதல்வர்கள் உட்பட நுாற்றுக்கணக்கான தலைவர்கள், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், 70 லட்சம் மக்களுக்கான மருத்துவ சேவைகள், வர்த்தகம் மற்றும் கல்வி வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக நாட்டில், இணைய சேவை மிக நீண்ட நாட்களாக துண்டிக்கப்பட்டு இருப்பதை கவனிக்க வேண்டி உள்ளது.மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம், இந்தியாவில் வசிக்கும் மத சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது, அந்நாட்டின் மத சார்பற்ற தன்மைக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது.எனவே, ஜம்மு - காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் விபரங்கள், அவர்கள் எப்படி நடத்தப்படுகின்றனர் என்ற தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.

மேலும், ஜம்மு - காஷ்மீரில் தகவல் தொடர்பு மற்றும் மத சுதந்திரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து மதிப்பிட வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கையெழுத்துகுடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளைச் சேர்ந்த நான்கு எம்.பி.,க்கள், இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதற்கிடையே, பிரதமர் மோடி, கடந்த, 6ம் தேதி, லோக்சபாவில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுகையில், 'காஷ்மீரில் நிலவிய பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தால், 1990, ஜனவரி, 19ல், காஷ்மீர் பண்டிட்கள், தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.'ஜம்மு - காஷ்மீரில், வீட்டுக் காவலில் உள்ள மூன்று முன்னாள் முதல்வர்களும் இதை மறுக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பினார்.

இந்த பேச்சுக்கு, அமெரிக்காவில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்கள் சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இதன் மூலம், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு கிடைக்கும் என்றும், பிரதமரின் பேச்சு, பண்டிட்களின் மறுவாழ்வுக்கு ஆரம்பமாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்திய பயணம்: மெலினா மகிழ்ச்சி!இந்தியப் பயணம் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலினா டிரம்ப், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான அழைப்புக்கு நன்றி. இம்மாத இறுதியில் புதுடில்லி மற்றும் குஜராத்தின் ஆமதாபாத் நகரங்களுக்கு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் பயணம், இந்தியா - அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (56)

 • karthik - ,

  காஷ்மீர் பண்டிதர்களுக்கு என்ன சுதந்திரம் அங்கு கிடைத்தது?

 • Indhuindian - Chennai,இந்தியா

  அமெரிக்கா எப்பதான் இந்த கட்ட பஞ்சாயத்தை நிறுத்துமோ. மத்தவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கறதே முழு நேர வேலையா போச்சு. அங்கே போயி மெக்ஸிகோ பார்டரை தொறந்து விடுங்கள். எதுக்கு சுவர் எழுப்பறீங்க. தக்காளி சட்னி - ரத்தம் உவமானம் சரியா பொருந்தும்

 • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

  1989 டு 1991 காஷ்மீரி அப்பாவி பெண்கள் குழந்தைகள் பட்ட பகலில் வெட்டபட்டு கொல்ல பட்டனர். பல இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதில் சிலர் மரம் அறுக்கும் மில்களில் வெட்டி கொல்ல பட்டனர். ஸ்ரீ நகர் வழிபட்டு தலங்களில் இருந்து காஷ்மீரி பண்டிட்களுக்கு தங்கள் மனைவியரை ஸ்ரீ நகரில் விட்டுவிட்டு உயிர் பிழைத்து ஓடுமாறு மிரட்டப்பட்டனர். பல வயதான முதியவர் குழந்தைகள் ஈவு இரக்கமில்லாமல் வெட்டி கொல்ல பட்டனர்.

 • swega - Dindigul,இந்தியா

  நீங்க மத சுதந்திரம் கேக்குறீங்களா இல்ல மதமாற்ற சுதந்திரம் கேக்குறீங்களா?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  எலே கூமுட்டை, ஒன் வீட்டு ஓட்டையை அடை, மத சுதந்திரம் இங்கு வெறும் முஸ்லிம்களுக்கும் கிருத்துவர்களுக்கு மட்டும் தான் உள்ளது ஆனால் இந்துக்கள் என்றால் அவர்கள் செகுலராக இருக்கவேண்டும்??ஏன் முஸ்லிம்கள், கிறித்துவர்கள் மதம் பிடித்து அலைந்தால் அது நல்லது இந்து ஏதாவது சொன்னால் எங்கே மத நல்லிணக்கம் என்று முஸ்லீம் நேரு காங்கிரஸிடம் பணம் வாங்கி விமரிசிப்பதே இந்த மீடியாவுக்கு வாடிக்கையானதால் அயல்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் ஏதோ இந்தியாவில் முஸ்லிம்களும் கிருத்துவர்களும் மிகவும் கஷ்டப்படுவது போல ஒரு மாய தோற்றம் தெரிகின்றது. நீ இங்கே வந்து வாழ்ந்து பார் அப்போது தான் உனக்கு புரியும் இந்து எவ்வளவு அல்லல்படுகின்றான் முஸ்லீம் கிருத்துவன் மதத்திற்காக எவ்வளவு ஜாலியாக இருக்கின்றான் என்று???

Advertisement