Advertisement

ஆவினில் முறைகேடு: மக்கள் நீதி மையம் குற்றச்சாட்டு

Share
சென்னை,: ''குரூப் - 4' முறைகேடுகளை தொடர்ந்து ஆவின் நிறுவன பணி நியமனத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளது என மக்கள் நீதி மையம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சியின் அறிக்கை: 'குரூப் - 4' முறைகேடுகளை தொடர்ந்து ஆவின் நிறுவன பணி நியமனத்திலும் மெகா ஊழல் நடந்துள்ளது ஊடக செய்திகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முட்டை முதல் அனைத்திலும் முறைகேடுகளின் மொத்த உருவமாக திகழும் அ.தி.மு.க. அரசு உடனடியாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்கம் செய்ய வேண்டும். ஆவினில் ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் இழப்பு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும்.

கால்நடை மருத்துவ துறையில் காலியாக உள்ள 1141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை வரும் 23ம் தேதி ஏழு நகரங்களில் நடத்த இருந்தனர். தற்போது அத்தேர்வு சென்னையில் மட்டும் நடத்த முடிவு செய்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கனவே அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வரும் காலங்களில் தேர்வு முறையையும் இந்த அரசு தனியாருக்கு தாரை வார்த்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • konanki - Chennai,இந்தியா

    முரசொலி நிலம் நிலை என்ன?( பஞ்சமி நிலமா ?மூலப்பத்திரம் எங்க? பட்டா உள்ள நிலத்திற்கு வாடகை ஏன்? இதில் உள்ள முரண்பாடு/முறைகேடுகள் குறித்து கமல் கேள்வி ஏன் எழுப்பவில்லை. கம்யூனிஸ்ட் களுக்கு 25 கோடி இவருக்கு எத்தனை கோடிகள்?

  • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

    Loose talks and statements will not serve any purpose. If he has any solid evidence he is at liberty to file a case in the court of law. It is not a cinema to talk dialogues. We cannot expect a characterless person to talk with subject.

  • ஜப்பான்நாட்டு துணைமுதல்வர் சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா

    முத்தகாசருக்கு ஆவினை பற்றி கவலை இல்லை, ஹிந்துக்கள் ஓட்டை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் ராஜேந்திர பாலாஜி மீது காண்டு.. திடீர் கிரிஸ்துவர் அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை செவ்வனே செய்கிறார்

  • konanki - Chennai,இந்தியா

    திமுக மற்றும் திக தலைவர்கள் ஹிந்துக்களை கேவலமாக பேசுவதை சமீப காலமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொது வெளியில் கண்டித்து பேசுவதால்/அறிக்கை விடுவதால் திரு கமல் அவர் மீது தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டுகிறார். இதில் கமலுக்கு லாபம் நிச்சயம்

  • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

    தனி மனித ஒழுக்கம் இல்லாத தற்குறி ஆசாமி . அடுத்த நாட்டின் மக்கள் மீதும் மதத்தின் மீது விசுவாசம் காட்டும் ஆசாமி . தேசவிரோத கும்பலுடன் காய் கோர்த்துள்ள ஆசாமி நீர் பேசாதிரும்

Advertisement