Advertisement

இறந்த குழந்தையுடன் பேசிய தாய்

Share
சியோல்,: தென்கொரியாவில், 'விர்சுவல் ரியலிட்டி' எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம், ஒரு பெண், இறந்து போன தன் 7 வயது குழந்தையின் மின்னணு பிம்பத்துடன் பேசினார். இதற்காக, அந்த பெண்ணுக்கு, பிரத்யேக கண்ணாடி, கையுறை அணிவிக்கப்பட்டது. அந்த கண்ணாடி வழியே அவர், பிம்ப வடிவில் இருந்த தன் மகளின் உச்சியை தொட்டு முகர்ந்து, நலம் விசாரித்தார்.

இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற அக்குழந்தையின் தந்தை உட்பட அனைவரின் கண்களையும் குளமாக்கியது. இறந்து போன தங்கள் குடும்பத்தினரின் பிம்பங்களுடன் பேசுவதற்கும், உணர்வதற்கும் இது முன்னோடி திட்டமாக கருதப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement