Advertisement

டில்லி தேர்தல் தோல்வி: பா.ஜ., - காங்., சுயவிமர்சனம்

புதுடில்லி: ''டில்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு, பா.ஜ., தலைவர்கள் சிலரின் தரகுறைவான, வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சுக்களே காரணம்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புக் கொண்டுள்ளார்.

அமித்ஷா கூறியதாவது: டில்லி சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., தலைவர்கள் சிலர், தரக்குறைவாகவும், வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் பேசினர். இதை, பா.ஜ., ஒரு போதும் ஆதரிக்கவில்லை; ஆதரித்ததும் இல்லை. ஆனால், இந்த பேச்சுக்கள் தான், டில்லியில், பா.ஜ., அடைந்த தோல்விக்கு காரணமாகிவிட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, டில்லி தேர்தலில் மக்கள் ஓட்டளித்தனர் என்பதை ஏற்க முடியாது. இதுகுறித்து, என்னுடன் விவாதம் நடத்த நேரம் கேட்டு, என் அலுவலகத்துக்கு யார் வந்தாலும், மூன்று நாட்களில், அவருக்கு நேரம் கொடுக்கப்படும். மதத்தின் அடிப்படையில் நாட்டில் நடந்த பிரிவினைக்கு, காங்கிரஸ் தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

காங்.,கை தாக்கிய வைரஸ்:



''டில்லி சட்டசபை தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு, சீனாவின், 'கோவிட் - 19 வைரஸ்' போல், தீர்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது,'' என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மத்தியில் ஆட்சியை, காங்கிரஸ் இழந்து, ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், காங்கிரசை சேர்ந்த சிலர், இன்னும் தங்களை மத்திய அமைச்சர்களாகவே கருதிக் கொள்கின்றனர். காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை, ஓட்டுக்களை பிரிக்க, பா.ஜ., பயன்படுத்திக் கொண்டது. ஆனாலும், டில்லி தேர்தல் முடிவு, பிரதமர் மோடி, அமித் ஷாவின் முகங்களில் விழுந்த அறை.

டில்லி தேர்தல் முடிவு, கோவிட் - 19 வைரஸ் போல், காங்கிரசுக்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., பீஹார் ஆகிய மாநிலங்களிலும், காங்கிரஸ் மறைந்துவிட்டது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Girija - Chennai,இந்தியா

    குரங்கும் இரண்டு பூனைகளும்

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      அய்யய்யோ, தலை வெடிச்சிடும் போல இருக்கே.... அதுலே, யாருங்க குரங்கு ?

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    முஸ்லீம் நேரு காங்கிரஸ் சீனாவின், 'கோவிட் - 19 வைரஸ்' போல், தீர்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது,' இந்தியாவின் மீது. இது எப்போ ஒழியுமோ அன்றே இந்தியா சுதந்திரம் அடைந்ததாய் எடுத்துக்கொள்ளலாம்

  • blocked user - blocked,மயோட்

    பாஜக விசுவாசிகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்போடவேண்டும். வெறுமனே விசுவாசியாக இருந்து பயன் இல்லை.

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      "பல இந்துக்கள் ஓட்டு போடா செல்ல வில்லை என்றிருந்தது."

    • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

      மீதியைக் காணோம்.

Advertisement