Advertisement

இன்போசிஸ் நாராயண மூர்த்தி மருமகன் பிரிட்டன் நிதியமைச்சர்

லண்டன்: 'இன்போசிஸ்' நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனாக், பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் அமைச்சரவையை அதிரடியாக மாற்றி அமைத்து வருகிறார். நிதி அமைச்சராக இருந்த, பாக்., வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவித், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனாக், 39, பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு பிரிட்டன் ராணி எலிசபெத், நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, பிரிட்டன் அமைச்சரவையில், பிரதமருக்கு அடுத்தபடியாக, மிக உயர்ந்த பதவியை வகிப்பவர் என்ற பெருமை, ரிஷிக்கு கிடைத்துள்ளது. பிரதமர் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் பெருமையும் அவருக்கு கிடைக்கவுள்ளது.

நாராயணமூர்த்தியின் மகளான, அக் ஷதாவை திருமணம் செய்துள்ள ரிஷி, முதல் முறையாக, 2015ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, பிரிட்டன் பார்லிமென்டிற்குள் நுழைந்தார். 'கன்சர்வேடிவ்' கட்சியின் முக்கிய தலைவராகவும் உருவெடுத்தார்.

ரிஷியை தொடர்ந்து, இந்திய வம்சவாளியைச் சேர்ந்த, எம்.பி.,க்களான, அலோக் சர்மா, சுயேல்லா பிராவெர்மன் ஆகியோருக்கும் பிரிட்டன் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (37)

 • jagan - Chennai,இந்தியா

  அங்கேயும் ஆரியர்கள் தானா? -இப்படிக்கு வயித்தெரிச்சல் மற்றும் கும்பி கருகும் திருட்டு திராவிடர்கள்.

  • மணி - புதுகை,இந்தியா

   துரைக்கு நீயே காலமுக்கிவிட்டுக்கோ...இந்தப்பக்கம் வரவேண்டாம்.

 • Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்

  நம்மை ஆண்டவனுக்கு நாமே பட்ஜெட் போடப்போகிறோம் . ஆஹா ஆஹா ஆஹா ...…...…......…….

 • Nallavan Nallavan - Dhanbad,இந்தியா

  இந்தியர் / இந்திய வம்சாவளி என்பதில் நாம் மகிழலாம் ..... அங்கேயே சென்று அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்கிறோம் என்றும் சிலர் சொல்ல வாய்ப்பிருக்கிறது.... இட ஒதுக்கீட்டை இங்கிலாந்தும் கடைபிடிக்க மறுப்பது அதன் ஆ ரி ய க் கூத்தையே காட்டுகிறது .....

  • Anandan - chennai,இந்தியா

   பத்து சதவிகிதம் தந்த பொது உங்க ஆளுங்க யாருமே அதை வேண்டாம்னு சொல்லலியே, அது இடஒதுக்கீட்டில் வராதோ? அதாவது எல்லாம் உங்களுக்கு மட்டுமே கிடைக்கணும்?

  • jagan - Chennai,இந்தியா

   "பத்து சதவிகிதம் " யாருக்கு ? பொருளாதாரத்தில் பின் தங்கிய எல்லோருக்கும் தானே.

  • மணி - புதுகை,இந்தியா

   அங்கேயே ராணிக்கு கால் அமுக்கிவிட்டுக்கிட்டு கிடக்கட்டும், இங்கே வந்து இடத்தை ஆக்கிரமிக்காத்திருந்தால் சரி.

 • sambantham sasikumar - chennai,இந்தியா

  வாழ்த்துக்கள், உங்கள் திறமைக்கு, உங்கள் உழைப்புக்கு தலைவணங்குறேன். நீங்கள் மட்டும் இந்தியாவில் இருந்திருந்தால் ஒரு VAO. போஸ்ட் கூட கிடைத்திருக்காது. இடஒதுக்கீடு, ஊழல், தரகர், அரசியல் போன்ற சுனாமிகளால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கும் இடம் தெரியாமல் போயிருக்கக்கூடும். உங்கள் திறமைக்கு ஏற்ற பதவியில் அமர்த்திருக்கறீர் வாழ்த்துக்கள்

  • baygonspray - Aryan,ஈரான்

   Vijaya மல்லையாவுக்கு இந்தியாவில் பணம் சொத்து கிடைக்கவில்லையா ?

  • மணி - புதுகை,இந்தியா

   அதான் கதறி அழுது பத்து வாங்கிட்டேளே...இன்னும் என்ன கூப்பாடு?

 • K.Sugavanam - Salem,இந்தியா

  சூப்பர்..இதுனால இந்தியாவுக்கு என்னா பிரயோசனம்?

  • மணி - புதுகை,இந்தியா

   கிருத்துவ ராணிக்கு கால்பிடிப்பதை பார்த்து சந்தோசப்படலாம்ல...அதான்.

Advertisement