Advertisement

முதல்வர் அறிவிப்பு: கமல் கட்சி பாராட்டு

சென்னை: 'டெல்டா' பகுதியை, வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு, கமல் கட்சி சார்பில், முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சியின் அறிக்கை: விளைநிலம் மிகுந்த காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என, 2018 மே மாதம், 19ம் தேதி, மக்கள் நீதி மையம் நடத்திய, விவசாயிகள் மாநாட்டில், தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தற்போது, அது முதல்வரிடமிருந்து அறிவிப்பாக வந்திருப்பது, பாராட்டப்பட வேண்டியதாகும்.

அறிவிப்பு, விவசாயிகள் துயர் தீர்க்கும் சட்டமாக மாற, இந்த அரசு, என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது, விவசாயிகள் நலன் விரும்பும், எங்களை போன்றோரின் எதிர்பார்ப்பு. ஆட்சி காலத்தின் கடைசி முழுமையான, பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கும் இவ்வரசு, பட்ஜெட் கூட்டத்தொடரை பயன்படுத்தி, டெல்டா பகுதியை, வேளாண் மண்டலமாக மாற்றும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், முதல்வரின் அறிவிப்பு, வெறும் கைதட்டல் வேண்டி பேசப்பட்ட ஒன்றாகி விடும் .இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'குரூப் - 4' முறைகேடுகளை தொடர்ந்து, ஆவின் நிறுவன பணி நியமனத்திலும், மெகா ஊழல் நடந்துள்ளது, ஊடக செய்திகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. முட்டை முதல், அனைத்திலும் முறைகேடுகளின் மொத்த உருவமாக திகழும், அ.தி.மு.க., அரசு, உடனடியாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்கம் செய்ய வேண்டும். ஆவினில் ஏற்பட்டுள்ள, பல கோடி ரூபாய் இழப்பு குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க வேண்டும்.

கால்நடை மருத்துவ துறையில் காலியாக உள்ள, 1,141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, வரும், 23ம் தேதி, ஏழு நகரங்களில் நடத்த இருந்தனர். தற்போது அத்தேர்வு, சென்னையில் மட்டும் நடத்த முடிவு செய்திருப்பது, அதிர்ச்சியாக உள்ளது. ஏற்கனவே, அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகளால், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வரும் காலங்களில் தேர்வு முறையையும், இந்த அரசு, தனியாருக்கு தாரை வார்த்து விடுமோ என்ற, அச்சம் எழுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • jagan - Chennai,இந்தியா

    நீ இருக்கியா ? சொல்லவே இல்ல .

  • Baskar - Paris,பிரான்ஸ்

    சில விஷயங்களில் நீ அண்ணா . .தி.மு.க வுடன் முரண்பட்டாலும் மன பக்குவம் உள்ள உன்னை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

  • Girija - Chennai,இந்தியா

    அது போன மாசம் நீ எப்போவுமே அவ்வை சண்முகிதான் காமெடி பீஸ்

  • வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா

    இது எப்படி என்றால் அன்று MGR வீராவேசமாக தபால் கார்ட் விலையை குறைப்பேன் என்பதை போல உள்ளது

  • blocked user - blocked,மயோட்

    பெரிதாக பணம் வரவில்லை என்றால் தொழில் பக்தி காரணமாக இதை மடக்கி வைத்து இருந்தார்... இப்பொழுது ஏதாவது ஊக்கத்தொகை வந்து இருக்கும்.

Advertisement